கிளாமர் காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓவர் டேக் பண்ணிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். ரோஷினியை பொருத்தவரை அவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். பள்ளி படிப்பை முடித்த பிறகு எத்திராஜ் கல்லூரியில் ஹியூமன் பயாலஜி என்கிற படிப்பை படித்தார் ரோஷினி.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவருக்கு தொடர்ந்து சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முக்கியமாக நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து நடிப்பதற்கு முயற்சிகளை செய்ய தொடங்கினார்.

இந்த நிலையில்தான் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரோஷினி. ரோஷினி கண்ணம்மாவாக நடித்த பொழுது அவருக்கு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதன் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினார்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் வாய்ப்பு:

அதற்கு பிறகு விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே விஜய் டிவியை பொறுத்தவரை அதில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கலில் ஏற்கனவே நாடகங்களில் நடிக்கும் நடிகைகளைதான் பங்கு பெற வைப்பார்கள் புதிதான ஆட்களை எல்லாம் கொண்டுவர மாட்டார்கள்.

அப்படியாக ரோஷினியை அழைத்து வந்த பொழுது அவர் அதிகமாக நகைச்சுவை செய்ததை பார்க்க முடிந்தது. அந்த நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. முக்கியமாக காமெடியன் ராமருடன் சேர்ந்து ரோஷினி செய்த நகைச்சுவைகள் மிகவும் ட்ரண்டானது.

அதனை தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி சீசன் மூன்றில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றார் ரோஷினி. அவருக்கு இருந்த நகைச்சுவை திறன் காரணமாக முக்கிய போட்டியாளராக குக் வித் கோமாளி சீசன் 3 இல் ரோஷினி இருந்து வந்தார்.

சினிமாவில் அறிமுகம்:

இந்த பிரபலத்தை பயன்படுத்தி சினிமா துறையில் வாய்ப்புகளை தேட துவங்கினார் ரோஷினி. இந்த நிலையில்தான் சமீபத்தில் கருடன் திரைப்படத்தில் அங்கையர் கன்னி என்கிற கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்திருந்தார்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்திருந்தார் என்றாலும் கூட கதைக்கும் முக்கியமான கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது இதனால் கவனம் பெறும் கதாபாத்திரமாக அவர் இருந்தார். தமிழில் இன்னும் சில படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

சினிமாவிற்கு சென்றதும் மாடர்ன் லுக்கில் ரோஷினி சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version