சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ரூபா ஸ்ரீ-யா இது..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த பாரதி என்ற கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ. வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் அதன் பிறகு துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ரூபா ஸ்ரீ-க்கு சினிமா வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறைந்தது.

பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார் .சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய 13 வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியான கள்ளனும் போலீசும் என்ற திரைப்படம்தான் அவருடைய முதல் திரைப்படம். அதன் பிறகு எங்க வீட்டு வேலன், பொண்டாட்டியே தெய்வம், இதய நாயகன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட நடிகை ரூபா ஸ்ரீ அதன்பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 25க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கும் இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் பாரதியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் கூட இளம்வயதில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரூபா ஸ்ரீ-யா இது..? நம்பவே முடியலையே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …