கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. எனக்கு ஒரு நோய் இருக்கு.. VJ பாவனா ஓப்பன் டாக்..!

VJ பாவனா விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக விளங்கியவர். திரை உலகில் எப்படி நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த வகையில் இவருக்கும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இன் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.

கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு..

ஆரம்ப நாட்களில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்த இவர் ராஜ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி போன்றவற்றில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

மேலும் இவர் இந்தியன் பிரீமியர் லீக், ப்ரோ கபடி லீக் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் 2018-இல் ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இன் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் தனது முதல் பாடலான தி மாஷப் தொடரை வெளியிட்டார்.

மேலும் 2020-இல் இசை இயக்குனர் தரனுக்காக முதல் பின்னணி பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலானது வீராதி வீரா யூட்யூபில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்று தந்தது.

ஆனா ஒரு நோய் இருக்கு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சிரியத்தில் மூழ்கடிப்பார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜே பாவனா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அதில் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என்ற கேள்விக்கு ஆம் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. உண்மை தான் திருமணம் ஆகி பத்து ஆண்டுகளாக போகிறது எனக் கூறியிருந்தார்.

VJ பாவனா ஓபன் டாக்..

அதனைத் தொடர்ந்து உங்களுக்கு நீங்கள் ஒரு சோம்பேறி தானே என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல்  பதில் அளித்தார் VJ பாவனா.

அந்த பதிலில் ஆம் அது ஒரு நோய் என பதிலளித்திருக்கிறார். இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சோம்பேறித்தனத்திற்கு மட்டும் மருந்து ஏதும் கிடையாது. ஒரு மனிதன் வாழ்க்கையில் வீழ்கிறான் என்றால் அதற்கு சோம்பேறித்தனம் தான் மிக முக்கிய காரணமாக உள்ளது.

அது ஒரு நோய் என்பதை விட கொடிய நோய் என்று சொல்லலாம் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை தற்போது அவரது ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருவதால் விஜே பாவனாவிற்கு சோம்பேறித்தனம் என்ற ஒரு கொடிய நோய் உள்ளது என்பதை நக்கலாக சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version