பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக இதனால் தான் நடிச்சேன்..! – போட்டு உடைத்த புவனேஸ்வரி..!

நடிகை புவன்ஸ் (பூனைக்கண் புவனேஸ்வரி) இதனால் தான் நான் பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய நடிகை புவனேஸ்வரி நான் சினிமாவில் எளிதாக அறிமுகமாகி விட்டேன். ஆனாலும் கூட சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என இப்படி பல பேரால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

பாய்ஸ் படத்தில் இளம் வயது மாணவர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இது குறித்து இயக்குனர் சங்கரிடம் என்ன சார் இப்படி இருக்கு இந்த காட்சி என்று கேட்டேன்.

அதற்கு அவர் காட்சியை இப்படி பார்க்கும் பொழுது உங்களுக்கு அப்படி தான் தெரியும். ஆனால், அந்த பசங்களின் விரல் கூட உங்கள் மீது படாது அப்படித்தான் காட்சி எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

அதன்பிறகு அதனை ஏற்றுக் கொண்டு நான் நடித்தேன். நான் ராணியாக நடித்தால் ராணி ஆகி விடமாட்டேன்… பிச்சைக்காரியாக நடித்தால் பிச்சைக்காரி ஆகி விடமாட்டேன்.

ஆனால் பாலியல் தொழிலாளியாக நடித்தால் மட்டும் எப்படி பாலியல்தொழிலாளியாகி விடுவேன். என் மீது சுமத்தப்படும் இந்த பாலியல் குற்றச்சாட்டு அபாண்டமானது.

என் மீது வன்மம் கொண்ட நபர்கள் தான் இப்படியான விஷயங்களை பரப்புகிறார்கள். என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டிருக்கிறது என்று நான் அடிப்படையில் கலங்க போவதில்லை.

அப்படி நான் கண்ணீர் விட்டு அழுதால் அவர்கள் மீதி இருக்கக்கூடிய வன்மம் தீர்ந்து விடும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய கர்மாவின் படி என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது என்று நான் கடவுளை நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை புவனேஸ்வரி.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை புவனேஸ்வரி மீது பல்வேறு பாலியல் புகார்கள் வந்திருக்கின்றன. இதனால் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்று இருக்கிறார் நடிகை புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் அளித்துள்ள இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நடிகை புவனேஸ்வரி தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார். இடையில் சில சீரியல்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Bhuvaneshwari has recently opened up about her experience playing the pivotal role in the movie Boys. She states that she was attracted to the character due to its complexity and depth, as it depicted a woman with strength, courage and resilience. Bhuvaneshwari explains that she found herself drawn to this character because of its ability to show both vulnerability and strength at the same time. She believes that it was important for her to be able to bring out these qualities in her performance, so viewers could connect with her character on an emotional level.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version