சில்லுன்னு ஒரு காதல் பூமிகாவா இது..? இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா..?

2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பூமிகா தெலுங்கில் குஷி என்ற இரண்டாவது படத்தை செய்ததன் மூலம் ரசிகர்கள் விரும்பும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2003-இல் வெளி வந்த ஹிந்தி படமான தேரே நாம் என்ற திரைப்படத்திலும் பூமிகா நடித்திருக்கிறார்.

நடிகை பூமிகா..

நடிகை பூமிகாவை பொருத்த வரை தமிழ் திரைப்படமான பத்ரி திரைப்படத்தில் 2001-ல் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். அதிலும் ரோஜா கூட்டம் படத்தில் இவர் ஸ்ரீகாந்தோடு மிக நெருக்கமாக நடித்து அனைவரையும் அசத்தினார்.

இவரை தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோயினி என்று அனைவரும் பாசத்தோடு அழைத்தார்கள்.இதனால் நடிகை பூமிகாவும் 90 கிட்ஸின் பேவரேட் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தமிழ் படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி அங்கு இருக்கும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

இவ்வளவு பெரிய மகனா?

ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோட ஜோடி போட்டு நடித்து ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக் கூடியவர்.

இப்போது 44 வயதை எட்டிப் பிடித்திருக்கும் பூமிகா இன்னும் சினிமாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இதனை அடுத்து நடிகை பூமிகா தன் கணவர் மற்றும் மகனோடு இருக்கின்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய இந்த குடும்ப புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது.

கவர்ச்சியாக உடையை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் ஒவ்வொரு நடிகைகளும் அதிக அளவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிடக்கூடிய நேரத்தில் தன் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து இந்த வயதில் எவ்வளவு அழகாக இருக்கக்கூடிய பூமிகாவுக்கு எவ்வளவு பெரிய மகனா? என்று வாய் அடைத்துப் போகக்கூடிய அளவு ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் பூமிகாவின் மகனின் புகைப்படம் நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும். அந்த அளவு குடும்பத்தோடு ஒன்றாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாமே என்ற ரீதியில் தற்போது ரசிகர்கள் அவர்கள் பங்குக்கு பலவிதமான கேள்விகளையும் பூமிக்காவிற்கு வைத்திருக்கிறார்கள்.

இதற்கான பதிலை அவர் விரைவில் தருவார் என்ற எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நடிகை பூமிகா பூர்த்தி செய்வார் என்று நம்பலாம்.

இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த குடும்பப்படம் தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version