2011 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3யில் கலந்துகொண்டு ஆஜித் வெற்றி பெற்றுள்ளார். இளம் வயதிலேயே இசையின் மீது அதிக பிரியம் கொண்டவர் ஆஜித். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர், அப்பா பெயர் நிஷார் அகமது, அம்மா ஷபானா பேகம், இவரது தம்பி ரோஷன் ரியாஸ், மேலும் இவருக்கு மிகப் பிடித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இவரது குரு.
அஜித் 2014 இல் வெளியான பூவரசன் டிபி என்ற படத்தில் மூன்று பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கேப்ரில்லா, இவரும் நடன நிகழ்ச்சி மூலமாகவே அறிமுகமாகி பின்பு குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
த்ரீ படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாகவும் சமுத்திரகனியின் அப்பா திரைப்படங்களில் கேபிரில்லா நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கேபிரில்லா, அஜித் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். அந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஒவ்வொரு டாஸ்க்கும் வித்தியாசமானது.
நிகழ்ச்சியின் இடையில் தொகுப்பாளனி அர்ச்சனா அவர்களும் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி ரம்யா பாண்டியன் அறந்தாங்கி நிஷா அர்ச்சனா கேப்ரில்லா அஜித் சனம் மேலும் பலர் பங்கேற்று இருந்தார்கள்.
அந்நிகழ்ச்சியிலேயே இருவரும் காதலிக்கிறார்கள் என்று பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் ஒன்றாக பல வீடியோக்களை வெளியிட்டனர்.
வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்ற பல வீடியோக்களை வெளியிட்டனர்.
இருவரின் உறவு பற்றிய நேரடியாக அவர்களிடம் கேட்டபோது ஆஜித் மற்றும் கேப்ரில்லா நீங்கள் நினைப்பது போல ஒன்றும் கிடையாது நாங்கள் இருவரும் அக்கா தம்பியாக பழகி வருகிறோம் என்று நெற்றியில் அடித்தார் போல் கூறிவிட்டனர்.
இப்பதிலை அறிந்த ரசிகர்கள் அட இவர்கள் அக்கா தம்பி போல பழகி இருக்கிறார்கள் இவர்களையா இப்படி ட்ரோல் செய்தார்கள்.. என்ன சோன முத்தா… போச்சா…? என்று குழம்பி வருகின்றனர்.