“போட்றா வெடிய..” பிக் பாஸ் ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு..!! – குஷியில் ஜனனி ஆர்மி..!

 விஜய் டிவியில் நடைபெறும் ஷோக்களிலேயே மிகப்பிரமாண்டமான ஷோவாக விளங்குவது பிக் பாஸ் ஷோதான். இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் உலக நாயகன் கமலஹாசன். பல ஆண்டுகளாக நடந்துவரும் இந்த சோவில் தற்போது சீசன் 6 ஜனனி கலந்து கலக்கியிருக்கிறார்.

 பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 6 இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பங்கேற்று இருந்தது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடையே ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.

 இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி படு சுறுசுறுப்பாகவும், சூடாகவும் சென்று கொண்டிருந்த வேளையில் இறுதிச்சுற்றில் ஷிவின்,விக்ரமன், அசீம்  ஆகியோர் போட்டியிட்டனர்.

 மேலும் இறுதியில் அசின் மக்களின் மாபெரும் ஆதரவோடு முதல் இடத்தை கைப்பற்றினார். எனினும் தொகுப்பாளனியாக திகழ்ந்த ஜனனி தனது அபார துருதுருப்பான பேச்சும் திறனாலும் இலங்கை தமிழாலும் தமிழக மக்கள் மனதில் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களின் மத்தியில் பிரபலமானார்.

 முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கக்கூடிய இவருக்கு அற்புதமான வாய்ப்பு ஒன்று அதிர்ஷ்டவசமாக வந்து சேர்ந்துள்ளது.

 மேலும் இவர் நிறைய மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டது நடந்து விட்டதாகவும் ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் பிள்ளையை போல தற்போது தன்னை பார்ப்பதற்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து வேலை முடிந்து விட்டது வீட்டுக்கு கிளம்பவில்லையா என்று கமலஹாசன் கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதிலளித்த அவரை  பார்த்து ஊருக்கு போக முடியாத அளவு வாய்ப்புகள் உங்களுக்கு வந்து குவிந்திருக்கிறதே என்று கேட்ட கேள்வியை பார்த்து அனைவரும் அசந்து விட்டனர்.

 இதற்குக் காரணம் விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இலங்கை பெண்ணான ஜனனிக்கு வாய்ப்புள்ளது. இதை மறைமுகமாக கமலஹாசன் கேட்டபோது அதற்கு மிகவும் தாழ்மையோடு ஆம் என்று பதிலளித்த இவரை பார்த்து ஜனனி ஆர்மி இவருக்கு ஆதரவை அளித்திருப்பதோடு வாழ்த்துக்களையும் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam