பெரிய நம்பர் நடிகை நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ஒரே வருடத்தில் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்ட அந்த நடிகை சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனம் அவருடைய கணவர் பெயர் இருந்தாலும் கூட அதில் புழங்கும் பணம் மொத்தமும் பெரிய நம்பர் நடிகையின் பணம் தான் என்பது பலரும் அறியாத தகவல். அந்த வகையில், சமீபத்தில் வெளியான பேய் படம் ஒன்று ரசிகர்களை கவர தவறிவிட்டது.
இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்களிடம் எடுபடவில்லை. கூடுதலாக ஹிந்தி படத்தில் வேறு நடித்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில், இது ஒரு பக்கமிருக்க இவருடைய செம போட்டியாளர் என்று கருதப்படும் சின்ன நம்பர் நடிகை மணியான இயக்குனர் இயக்குனரின் படத்தில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவருடைய புதிய திரைப்படம் ஒன்றும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சின்ன நம்பர் நடிகையின் மார்க்கெட் தற்பொழுது உயர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், பெரிய நம்பர் நடிகையின் மார்க்கெட் சரிந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இவருடைய வங்கி இருப்பும் சரிந்து வருகிறது.
இதனை சுதாரித்துக் கொள்ள பெரிய நம்பர் நடிகையை ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பேய் படங்களை நான் மட்டும் தான் எடுப்பேன் என்று ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து வைத்திருக்க கூடிய அந்த டான்ஸ் மாஸ்டர் இயக்குனரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
பெரிய நம்பர் நடிகையை பொறுத்தவரை அவருடைய பொருளாதாரக் கொள்கை என்ன என்றால் அது ஒன்றுதான். அவருக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படும் போது அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து.. அந்த பணத்தை வைத்து இந்த நஷ்டத்தை ஈடு செய்த பிறகுதான் அடுத்த வேலைக்கு செல்வார்.
எனவே தற்போது அடுத்தடுத்த நஷ்டங்களை சேர்ந்து இருக்கும் சந்தித்திருக்கும் பெரிய நம்பர் நடிகை அடுத்ததாக படங்களில் நடித்து அந்த சம்பளத்தை பெற்று இந்த நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வேறு வழியே இல்லாமல் டான்ஸ் மாஸ்டர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோயினாக அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. திருமணத்திற்குப் பிறகு நேரடியாக ஒரு ஹீரோவுக்கு ஹீரோயினாக நடிக்க இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.