காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இந்த பிரபல நடிகர் தானாம்..!

நடிகர்கள், நடிகைகள் என்றாலே, ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். சினிமாவில் தான் முதலில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை, நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது, நடிகைகளின் வழக்கமாக இருந்தது.

இப்போது சீரியல் நடிகைகள் மத்தியிலும், இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுடன் அவர்களுக்கு விரைவில் நட்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் மீது காதல் உண்டாகிறது.

பல ஆண்டுகள் ஒன்றாக…

இதற்கு காரணம் சினிமாவில் சில மாதங்கள்தான் நடிகர், நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர். ஆனால் சீரியல் பல ஆண்டுகளுக்கு நீடிப்பதால், பல வருடக் கணக்கில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் அவர்களது பழக்கம், நட்பு என்ற எல்லைகளை கடந்து காதலாக மாறிவிடுகிறது. இந்த காதலை அடுத்து ஒரு சிலர் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஆனால் ஏற்கனவே திருமணமானவர்களுக்குள் இப்படி ஒரு காதல் ஏற்பட்டால் அது தவறான உறவுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது. இப்படியும் சில சர்ச்சைகள் தமிழ் டிவி சீரியல் நடிகர், நடிகையர் மத்தியில் ஏற்பட்டு அது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி 2 அர்ச்சனா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றவர் அர்ச்சனா. இந்த சீரியலில் அவர் பிரவீனாவின் இளைய மருமகளாக நடித்திருப்பார்.

இந்த சீரியலில் தனது மூத்த மருமகளாக ஆலியா மானசா நடித்திருப்பார். அவர் மீது புகார்களை கூறி, ஏதேனும் பழி சுமத்திக் கொண்டே இருப்பார் அர்ச்சனா. இவரது குற்றச்சாட்டுகளையும் போலியான புகார்களையும் ஆலியா மானசா முறியடித்து ஜெயித்துக் கொண்டே இருப்பார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்

அதை வைத்துதான் இந்த சீரியல் விறுவிறுப்பாக போனது. இந்த சீரியலை தொடர்ந்து அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று டைட்டில் வின்னராக ஜெயித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதி கண்ணம்மா ஹீரோ

அர்ச்சனா பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோவாக டாக்டர் பாரதி கேரக்டரில் நடித்து வரும் ஹீரோ அருண்பிரசாத் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்வதாகவும் புகைப்படங்கள் கசிந்து வந்தது.

அருண்பிரசாத்

இந்நிலையில் அருண் மற்றும் அர்ச்சனா காதல் உறுதியாக இருக்கிறது. தற்போது அருண் ஒரு போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோ சூட் நடக்கும்போது அர்ச்சனாவும் தான் உடன் இருக்கிறார்.

மை ஹீரோ

அது மட்டுமன்றி போட்டோ ஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா, தேங்க்ஸ் பார் ஷூட்டிங் மை ஹீரோ என்று போட்டோகிராபர்க்கு நன்றி கூறியிருக்கிறார்.

எனவே அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டில் கூறுகின்றனர்.

டாக்டர் பாரதியாக

ஆக இதன்மூலம் தனது காதலை உறுதி செய்திருக்கிறார் பிக்பாஸ் அர்ச்சனா. அட பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியாக, கண்ணம்மா கணவராக நடித்த நடிகர் அருண் பிரசாத் தானா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam