அந்த பொண்ணுக்கு 200 மெசேஜ் அனுப்பியிருக்கான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட வீடியோ..!

சமூக வலைதளங்களில் அழகான பெண்கள் எதை பேசினாலும், எப்படி நடித்தாலும் எப்படி வீடியோ வெளியிட்டாலும் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று விடுகிறது.

அந்த வகையில் இப்போது பிரபலத்தின் குரலில் மற்றொரு பிரபலமான நடிகை சம்யுக்தா வீடியோவில் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சம்யுக்தா

பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சம்யுக்தா. இவர் வாரிசு உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை என்றாலும், சிறந்த அழகியாக இருக்கிறார்.

மாடலிங் துறையிலிருந்து வந்தவர் என்பதால், எப்போதுமே மிக கவர்ச்சியான உடைகளில் மிக கவர்ச்சியான தோற்றத்தில் சம்யுக்தா காணப்படுவது வழக்கம்.

கவர்ச்சியான புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சம்யுக்தாவுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே, சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், சினிமாவில் அம்மா நடிகையாக இருந்து வருகிறார். சினிமா இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்.

ஏனெனில் இது தனிப்பட்ட கணவன் -மனைவி, காதலன் – காதலிக்கு இடையிலான அந்தரங்க விஷயங்களை மக்கள் மத்தியில் பேசும் ஒரு டாக் ஷோவாக இருந்தது.

அந்தரங்க விஷயங்களை

அதன்படி இப்படி அந்தரங்க விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வகையிலும், தவறு செய்தவர்களை உட்கார வைத்து அவர்கள் எப்படி தவறு செய்தார்கள், ஏன் தவறு செய்தார்கள், எப்படி எல்லாம் தவறுகள் நடந்தது என்பதை நேரடியாக கேள்வி கேட்டு, மக்கள் மத்தியில் அதை கொண்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், அதே நேரத்தில் ஒருதரப்பினர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

எந்த விதத்திலும் நியாயமில்லை

ஒரு குடும்பத்தில் இருக்கும் விஷயங்களை, கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களை, இப்படி நீங்கள் பொதுவெளியில் மற்றவர்கள் பார்வைக்கு கொண்டு வருவது எந்த விதத்திலும் நியாயமில்லை, இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயமாக இருக்கிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்றாலும் அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து பல படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அம்மா, அக்கா, அத்தை கேரக்டரில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்தியின் அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல் நாடோடிகள் படத்தில் நடிகர் சசிகுமார் அம்மாவாக நடித்திருப்பார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிகை சினேகாவின் அம்மாவாக நடித்திருப்பார்.

சுகன்யான்னு ஒரு பொண்ணு

இந்நிலையில், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, தற்பொழுது சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார்.

200 மெசேஜ் அனுப்பியிருக்கான்

சுகன்யான்னு ஒரு பொண்ணு. அந்த பொண்ணுக்கு ஒரு 200 மெசேஜ் அனுப்பி இருக்கான். சுகன்யாங்கற பேர் உனக்கு ரொம்ப பிடிக்குமா என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் வசனத்தை, சம்யுக்தா ரிலீஸ் செய்து பேசியிருக்கிறார் சம்யுக்தா.

இதனை தொடர்ந்து சுகன்யாவுக்கும், உங்களுக்கும் என்னதொடர்பு என்று இணைய பக்கத்தில் விவாதமே நடத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த பொண்ணுக்கு 200 மெசேஜ் அனுப்பியிருக்கான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட வீடியோ, இப்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version