நான்கு வருடம் கள்ளத்தொடர்பு.. இந்த மேட்டர்ல கவனமா இருக்கணும்… பிக்பாஸ் சம்யுக்தா ரகசியம்..!

மாடல் அழகியான சம்யுக்தா தோழியின் உதவியால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளி பாவனா தான் சிபாரிசு செய்து அவரை பிக்பாஸிற்கு அனுப்பி வைத்தார்.

அமெரிக்காவில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார் சம்யுக்தா. அப்போது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது லாக்டவுன் சமயத்தில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது சம்யுக்தாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

பிக்பாஸ் சம்யுக்தா:

இதை பார்த்து மிகவும் மனமுடைந்து போய்விட்டாராம் சம்யுக்தா. அந்த சமயத்தில் என்ன செய்வதில் யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் இருந்த சம்யுக்தா உடனடியாக தனது தோழியான பாவனாவுக்கு கால் செய்து நடந்த விஷயங்களை கூறி மிகுந்த மன வருத்தத்தோடு பேசினாராம்.

அந்த சமயத்தில் தான் தொகுப்பாளினி பாவனா மனதளவில் தேற்றியதோடு நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே இங்கு வந்துவிடு எனக் கூறினாராம்.

அத்துடன் இங்கு வரவைத்து பலவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட சொல்லி இருக்கிறார்.

அதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தாராம் விஜே பாவனா. தோழியின் சிபாரிசில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற சம்யுக்தா அங்கு தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு அவருக்கு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சம்யுக்தா மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

திரைப்படங்களில் வாய்ப்பு:

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல பெயரும் புகழும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே zee5 தளத்தில் வெளியான ஆனந்தம் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார்.

மேலும் சுந்தர்சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் .

தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் வாய்ப்பு தேடுவதற்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் .

இதனிடையே அவர் பேஷன் ஷோ, சமையல் மற்றும் ட்ராவல் உள்ளிட்ட வீடியோக்களை தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இத்துடன் தனது தோழியும் தொகுப்பாளினியுமான பாவனாவுடன் அவ்வப்போது டான்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தனது வாழ்வில் நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதாவது கொரோனா காலகட்டத்தில் என்னுடைய கனவு துபாயில் வேறொரு பெண்ணுடன் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக உறவில் இருந்தார்.

அது எனக்கு அப்போது தெரியாது. பின்ன தெரிய வந்ததும் எனக்கு என்ன பண்றது என தெரியவில்லை. மிகவும் இதயம் உடைந்து போய்விட்டேன். கோவிட் என்பதால் வெளியில் எங்கும் கூட செல்ல முடியவில்லை.

உதவிக்கும் யாரையும் கேட்க முடியவில்லை. வேறு ஒரு பெண்ணுடன் அவரே சென்றுவிட்டார். அதை நான் எப்படி தடுக்க முடியும்?

கணவரின் கள்ளத்தொடர்பு:

யாராவது வேறொரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் உங்களை வேறு மாதிரி மோசமாக நடத்துவார்கள். அதுதான் முதல் அறிகுறியாக இருக்கும் .

எதுக்கு தேவையில்லாமல் கோபப்படுறாங்க? முரட்டுத்தனமாக இருக்கிறார்கள் ?என்று தெரியும். நானே அதை உணர்ந்தேன்.

நாலு வருஷமா எனக்கு தெரியவே இல்லை.பின்னர் தான் என்னுடைய தோழி பாவனாவிடம் தான் நான் கூறினேன்.

அப்போதுதான் எனக்கு அவர் பிக் பாஸில் சிபாரிசு செய்து அனுப்பி வைத்தார். மகனுக்கு அப்பா தேவை இரண்டாம் திருமணம் நீங்கள் செய்து கொள்ளலாமே என தொகுப்பாளர் கேட்டதற்கு, இந்த திருமணத்தில் சட்டபூர்வமாக இன்னும் வெளியில் வரமுடியவில்லை.

அவர் வரவில்லை. கூப்பிட்டு பார்த்தோம் அவர் வராமல் இருக்கிறார். இதனால் துணையைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என மிகவும் எமோஷ்னாக பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் தன்னுடைய கணவரிடம் இருந்து தனக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை என்பதை சம்யுக்தா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version