பிக்பாஸ் சீசன் 8.. விலகிய கமல்ஹாசன்..? புதிய தொகுப்பாளர் இந்த நடிகர் தான்..?

நெதர்லாந்து நாட்டில் “பிக்பிரதர்” என்னும் பெயரில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சிகள் பிக்பாஸ் என்ற பெயரில் பரவலாக நடத்தி வருகிறது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், மராத்தி இப்படி பல மொழிகளில் தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

ஒவ்வொரு மொழியில் இருக்கும் நட்சத்திர நடிகர்கள் யாரேனும் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதன் மூலம் அதில் பல பேர் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி விடுகிறார்கள்.

இது முதன் முதலில் ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முன்னதாக நெதர்லாந் நாட்டின் தொலைக்காட்சியில் பிக் பிரதர் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது.

13 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகி தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசனின் மூலம் தொகுத்து வழங்கப்படுகிறது.

தொகுப்பாளராக கமல் ஹாசன்:

தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்ககளை தொடர்ச்சியாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல்ஹாசன் திரைப்படம் மற்றும் அரசியலில் பிஸியாக இருந்த சமயத்திலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.

அதற்காக அவர் கோடி கணக்கில் வருமானத்தை சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் மொத்தமாக ஒரு சீசனை தொகுத்து வழங்க கிட்டத்தட்ட ரூ. 100 கோடி சம்பளமாக பெற்றதாக கூட செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

 

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

100 நாட்கள் ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்களை எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் ஒன்றாக நடந்து கொள்வதும் அவர்களுடன் பேசி பழகுவதும் அவர்களின் உண்மை முகம் என்ன என்பதை வெளிப்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமே.

100 நாட்கள் தரமான சம்பவம்:

இந்த வீட்டில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அவர்களின் உண்மையான குணத்தையும் மக்களுக்கு நிரூபிப்பார்கள். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது நிலையில் 8வது சீசன் குறித்த தகவல் தற்போது வெளியாக இருக்கிறது.

அதாவது இந்த 8 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை எனவும், அவர் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது .

 

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி புதிய தொகுப்பாளராக நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விலகிய கமல்… அதகளம் செய்யப்போகும் சிம்பு:

முன்னதாகவே சிம்பு நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் கமல்ஹாசன் தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.

கமல்ஹாசன் தற்போது அரசியலில் படும் பிஸி ஆகிவிட்டதால் அதிலிருந்து விலகி விட்டதை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிறி உள்ளது. முன்னதாக பிக்பாஸ் 1 போட்டியாளராக ஆரவ், பிக்பாஸ் 2ல் நடிகை ரித்விகா, பிக்பாஸ் 3ல் நடிகர் முகின் ராவ், பிக்பாஸ் 4 சீசனில் ஆரி அர்ஜுன், பிக்பாஸ் 5வது சீசனில் ராஜு ஜெயமோகன், பிக்பாஸ் 6வது சீசனில் அசீம், பிக்பாஸ் 7வது சீசனில் அர்ச்சனா உள்ளிட்டோர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள் .

இதை அடுத்து தற்போது 8வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான வேலைகள் படு பிஸியாக நடந்து வருகிறது. மேலும், விரைவில் சிம்புவுடன் கூடிய புதிய ப்ரோமோவை மக்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version