பிக் பாஸ் சீசன் 8 களம் இறங்கும் சீரியல் நடிகர்.. வெளி வந்த அப்டேட்..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவில் முதன்மையாக கருதப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை ஏழு சீசன்களை கடந்துள்ளது. இந்த ஏழு சீசனங்களையுமே உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி அனைவரையும் குஷிப்படுத்தினார்.

அது போலவே பிக் பாஸ் சீசன் 8-ம் கலைக்கட்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என்ற விஷயம் பெருத்த இடியாய் வந்து சேர்ந்தது.

பிக் பாஸ் சீசன் 8..

மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தற்காலிகமாக தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கமலஹாசன் அறிவித்ததை அடுத்து இந்த சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்விகள் பலர் மத்தியிலும் எழுந்தது.

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 8 லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, எவர்கிரீன் நடிகை ரம்யா கிருஷ்ணன், சூர்யா போன்றவர்கள் தொகுத்து வழங்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடைசியாக மக்கள் செல்வம் விஜயசேதுபதி தான் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்த வழங்குவார் என்ற தகவல் வெளிவந்தது.

இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க ஒப்பந்தம் போட்டிருப்பதாக இணையங்களில் விஷயங்கள் பரவியதே ஒழிய அது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இன்று வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிக் பாஸ் 8 களம் இறங்கும் சீரியல் நடிகர்.. வெளி வந்த அப்டேட்..

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் களம் இறங்கப் போகும் நபர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் தற்போது இணையங்களில் வெளிவந்துள்ள நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் பிரபலமான நடிகர் அருண் இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்றாக உள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் என்பதால் இதில் நடித்த நடிகர் அருணுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. எனினும் இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை பற்றி இது வரை நடிகர் அருண் எதுவும் சொல்லவில்லை.

எனவே விரைவில் இது பற்றி உண்மை நிலை நமக்கு தெரிய வரும் அப்போது பிக் பாஸ் வீட்டில் களம் இறங்கப் போகக்கூடிய போட்டியாளர்கள் யார், யார்? என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும் அதுவரை நாம் காத்திருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version