மாத்து துணி வாங்க கூட காசு இல்லன்னு சொன்னவங்களா இவங்க..? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கக்கூடிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இது வரை ஏழு சீசன்களை கடந்து விட்ட பிக் பாஸ் எட்டாவது சீசனை நோக்கி அடி எடுத்து வைக்க உள்ளது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தாமரைச்செல்வி தன் கணவரோடு வெளிநாட்டுக்கு சென்று துணிச்சலாக வாட்டர் ட்ரைவிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றெடுக்கிறார்.

மாத்து துணி வாங்க கூட காசு இல்ல..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய போட்டியாளர்கள் சினிமா நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தை பெற்று விடுகிறார்கள்.

அந்த வகையில் சாதாரண பெண்ணாக இருந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பேசிய எதார்த்தமான பேச்சும் உறுதியான தன்னம்பிக்கை தூண்டக் கூடிய விஷயங்களும் இல்லத்தரசிகளுக்கு பிடித்து விட்டது.

இந்நிகழ்ச்சியில் இவர் தனது முதல் கணவரால் பட்ட கஷ்டங்களை சொன்னதோடு தன் மகனை பார்க்க வேண்டும் என கதறி அழுதது இன்னும் பலர் கண் முன் இருக்கலாம்.

அப்படி சொன்னவங்களா இவங்க..

பிக் பாஸ் சீசன் ஐந்தின் இறுதி வரை நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்த தாமரை செல்விக்கு சீரியல்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பும் பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் அதிகமாக வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தனது கணவரோடு இணைந்து நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த இவர் தற்போது சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகி அம்மாவாக நடித்து வருகிறார்.

யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

தாமரைச்செல்வி தனது வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் மாற்று துணி வாங்க கூட காசு இல்லாமல் சிரமப்பட்டு இருக்கக்கூடிய இவர் தற்போது தனது கணவர் பார்த்தசாரதியுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி இருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இவர் தற்போது வாழ்க்கையில் எல்லா சௌரியங்களையும் பெற்று விட பிக் பாஸ் சீசன் 5 உதவியுள்ளது என்பதை இந்த புகைப்படங்களை நிரூபிப்பதாக சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு படு தைரியமாக வாட்டர் ட்ரைவிங் செய்திருப்பதையும் பாராட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயமாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version