“ஒரு ஆம்பள இப்போ என் கூட இருந்தா.. இதை பண்ணுவேன்..” பிக்பாஸ் வனிதா சொன்னதை பாருங்க..!

தமிழ் திரைப்படத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து நாட்டாமை என்ற அடைமொழியோடு ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகராக விளங்கிய விஜயகுமாரின் இளைய மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவரது குடும்பமே திரைத்துறையைச் சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்ததால் இவரும் திரையுலகில் நடிகையாக பணி புரிந்து இருக்கிறார். அந்த வகையில் தமிழ் திரை உலகில் இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

பிக் பாஸ் வனிதா விஜயகுமார்..

இதனை அடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்தார். எனினும் இவர் எதிர்பார்த்த படி திரைப்பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை.

எனவே இவர் விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழில் கலந்து கொண்டு வாயாடி வனிதா என்ற பெயரை பெற்றிருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடித்து கிடைத்த புகழை விட பிக் பாஸ் இன் மூலம் அதிக அளவு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

 

இதனை அடுத்து தற்போது youtube சேனல்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரீவ்யூ செய்து வரும் பணிகளை செய்து வருவதோடு அடிக்கடி பேட்டிகளையும் கொடுத்து ரசிகர்களை அதிர விடுவார்.

ஒரு ஆம்பள இப்ப கூட இருந்தா..

இந்நிலையில் இவர் திரையுலகில் தான் பிடிக்காத இடத்தை தன் பெண் மூலமாக எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை ஜோவிகாவை பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக களம் இறக்கினார்.

இதனை அடுத்து தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப பெரியவர்களை வயது வித்தியாசம் இல்லாமல் மரியாதை குறைவாக பேசிய பேச்சுக்களை அடுத்து மக்களின் மத்தியில் ஜோவிகா நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவு பெற்றுவிட்டார்.

அத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்ப்புக்காக காத்திருப்பதோடு சமூக வலைத்தளங்களில் ஆத்து மீறிய கவர்ச்சிகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இத பண்ணுவேன் வனிதா டாக்..

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது இப்போது ஒரு ஆம்பள என் கூட இருந்தால் அவனுக்கு நான் உண்மையாக விசுவாசமாக 100% காதலுடன் அர்பணிப்புடன் இருப்பேன்.

ஆனால் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் அவனும் அதே போல இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன் இதில் எதுவும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை என சொல்லி இருக்கிறார்.

மேலும் எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது என்று என்னை கேலி செய்கிறார்களே தவிர என்னுடைய எதிர்பார்ப்பில் தவறு இருப்பதாக யாரும் என்னை கேலி செய்தது கிடையாது என பேசி இருக்கிறார் பிக் பாஸ் வனிதா இவருடைய அந்த பேச்சு இணையத்தில் வைரலாக இருக்கிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வனிதா சொன்ன விஷயத்தை பற்றி அவர்களுக்குள் பட்டி மன்றம் போட்டு பேசி வருவதால் இணையத்தில் அதிக அளவு பேசப்படும் விஷயமாக இந்த விஷயம் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version