ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா..

நடிகர் விஜயகுமார், மூன்று தலைமுறைகளை கண்ட சீனியர் நடிகர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர். 3 பிள்ளைகளுக்கு தந்தை ஆனவர். சினிமாவில் நடிக்க வந்த பிறகு, நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அருண் விஜய்

முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு கவிதா, அனிதா என்ற இரண்டு மகள்களும், அருண் விஜய் என்ற மகனும் உள்ளார். கவிதா, அனிதா இரண்டு பேருமே டாக்டர்கள், அருண் விஜய் நடிகராக இருக்கிறார். விரைவில் அவர் நடிப்பில், வணங்கான் படம் வெளிவர இருக்கிறது.

மஞ்சுளா – விஜயகுமார் தம்பதிக்கு பிறந்தவர்கள் 3 பெண் பிள்ளைகள். வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோர். வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர். ப்ரீத்தா இயக்குநர் ஹரியின் மனைவி.

ஸ்ரீ பாப்பா

விஜயகுமாரின் 3வது மகளான ஸ்ரீதேவிக்கு ஸ்ரீ பாப்பா என்ற செல்லப் பெயரும் உண்டு. இவர் ரிக்‌ஷா மாமா படத்தில், பேபி ஸ்ரீதேவியாக நடித்திருந்தார். பிறகு பெரிய பெண்ணாக தேவதையை கண்டேன், ப்ரியமான தோழி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பேத்தி தியா திருமணம்

சில வாரங்களுக்கு முன் விஜயகுமார் – முத்துக்கண்ணு தம்பதியின் பேத்தி ( அனிதா மகள்) தியா திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் அந்த விழாவில் அனைவருமே பங்கேற்று சந்தோஷமாக திருமணத்தை நடத்தினர். ஆனால் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார் அந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. அவரை யாரும் அழைக்கவும் இல்லை.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிக்பாஸ் வனிதா இதுகுறித்து கூறியதாவது,

என் அப்பா விஜயகுமார், என் மீது ஆரம்பத்தில் மிக பாசமாக இருந்தார். நான் மூத்த மகள் என்பதால் அதிக அன்பு காட்டினார். நானும் சின்ன வயதில் அப்பா மீது அதிக பாசமாக இருப்பேன். அவர் ஷூட்டிங் முடித்து லேட் நைட்டில் வந்தாலும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே தூங்காமல் விழித்திருப்பேன்.

இதையும் படியுங்கள்: வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..! 

பெரிய டிபன் கேரியருடன்

அப்பா ஷூட்டிங்கில் இருந்து திரும்பி வர ரொம்ப நேரமாகி விடும் நாட்களில், சில நேரங்களில் தூங்கி விடுவேன். அப்போது அப்பா, பெரிய டிபன் கேரியருடன் வந்து என்னை எழுப்பி, ஆப்பம் பாயா என இருவரும் நிறைய சாப்பிடுவோம். அப்படித்தான் அப்பா என் மீது பாசம் காட்டினார்.

நள்ளிரவில் வயிறு முட்ட சாப்பிட்டதால் அடுத்த நாள் நிறைய நேரம் தூங்கி விடுவேன். பள்ளிக்கூடம் போகச் சொன்னால் வயிறு வலிக்கிறது என்று பொய் சொல்லி நடித்து தப்பித்து விடுவேன். ஒரு நாள் லீவ் எடுத்துக்கோ என, அம்மாவும் அனுமதி தந்து விடுவார்.

டாமினேட் அதிகம்

என் தங்கை ஸ்ரீபாப்பா ( ஸ்ரீதேவி) பிறந்த பிறகு என் அப்பா அவள் மீது அதிக அன்பும், நெருக்கமும் காட்டினாள். சின்ன வயதிலேயே அவள் டாமினேட் அதிகம். எல்லா விஷயங்களிலும் பிடிவாதமாக நடந்துக்கொள்வார். எல்லா விஷயங்களிலும் மிகவும் புத்திசாலியாக இருப்பாள். அதனால் அவளது பிடிவாதம் ஜெயித்தது.

இதையும் படியுங்கள்:  பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

கைக்குள் போட்டு விட்டாள்

இப்போதும் அப்படித்தான், என் அப்பாவை அவள் கைக்குள் போட்டு விட்டாள். அவளது கண்ட்ரோலில் அப்பா இருப்பதால், அவளை மீறி அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால்தான் அவர் என்னை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார் என்று கூறியிருக்கிறார் பிக்பாஸ் வனிதா.

ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா என்று தனது தங்கை குறித்தும், அப்பா குறித்தும் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் வனிதா. இப்படி குடும்பத்தில் உள்ளவர்களை விமர்சித்து பேசி பேசியே அவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறாரே வனிதா என்றுதால் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version