“மார்பகம் குறித்து மோசமான கமெண்ட்..” இதை நியாபகம் வச்சிக்கோங்க.. விளாசிய பிக்பாஸ் அபிராமி..!

பிரபல நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தன்னுடைய உடல் அமைப்பு பற்றி மோசமான முறையில் கமெண்ட் செய்த நெட்டிசன்களை விளாசி விட்டிருக்கிறார்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருந்தார்.

அதன் மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு நடிகர் அஜித்தின் மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் முன்பே பிக் பாஸில் பிரபலமானார் பிக் பாஸ் அபிராமி. மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.

இதனால் இவருடைய புகழ் கிடுகிடுவென ரசிகர்கள் மத்தியில் பரவியது. மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் கவின் என்பவர் மீது காதல் கொண்ட இவர் அதனை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரான முகென் ராவ் என்பவரை காதலித்தார்.

ஆனால், இந்த இருவருக்கும் முன்னாள் நிரூப் நந்தகுமார் என்பவரை பிக் பாஸ் வீட்டிற்கு வெளியிலிருந்து காதலித்து வந்திருக்கிறார் நடிகை அபிராமி என்பது பலரும் அறியாத ஒரு கூத்து.

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தேன் நெட்டிஷன்கள் சிலர் இவருடைய உடல் அமைப்பு குறிப்பாக இவருடைய மார்பகத்தைப் பற்றி மோசமான முறையில் கருத்துக்களை பதிவு செய்து வந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : காட்ட கூடாத இடத்தில் க்ளோஸ் அப்.. அந்த விளம்பரத்திற்காக இப்படியா..? மைனா நந்தினி செஞ்ச வேலையை பாருங்க..!

இதனை பார்த்து கடுப்பான அபிராமி தனது சமூக பக்கத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிலாவது, நான் குண்டாகி விட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன்.

மேலும் என்னுடைய மார்பு பெரிதாக இருப்பதை பற்றி பலரும் மோசமான கருத்துக்களை கூறுகின்றனர். ஆமாம் என்னுடைய மார்பகம் பெரியது. தான் நான் குண்டாக தான் இருக்கிறேன்.

நான் ஒரு தென்னிந்திய பெண். பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா. இன்று நீங்கள் எந்த உறுப்பை பார்த்து மோசமான கருத்தை கூறுகிறீர்களோ..? அந்த உறுப்பில் இருந்து தான் உங்களுடைய முதல் உணவை எடுத்துக் கொண்டீர்கள்.

உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வருவது உங்கள் அம்மா தான். என்னுடைய மார்பு பற்றி கருத்து தெரிவிக்கும் முன் உங்களுடைய அம்மாவை பற்றி ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையுடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். இது ஜனநாயக நாடு என கருத்து தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் அபிராமியின் இந்த பக்குவமான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எழுந்திருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version