இயக்குனருடன் நடிகை ரச்சிதா மகாலட்சுமி திருமணம்..! யாருன்னு தெரியுமா..

கர்நாடகா சின்னத்திரை துறையில் பிரபலமாகி அதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. முதன்முதலாக ஏசியன் நெட் கனடா தொலைக்காட்சியில் 2007 ஆம் ஆண்டு ஒரு சீரியல் மூலமாக அறிமுகமானார் ரச்சிதா மகாலெட்சுமி.

கன்னடத்தில் 2010 வரை சீரியல்களில் நடித்து வந்தவர், அதன் பிறகு தமிழ் தொலைக்காட்சி துறையில் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டார் ரச்சிதா. அதனை தொடர்ந்து தமிழில் முயற்சி செய்ய தொடங்கினார்.

அப்படி தமிழில் அவர் நடித்த முதல் சீரியல் பிரிவோம் சந்திப்போம், விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் கொஞ்சம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இளவரசி என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது.

விஜய் டிவியில் வரவேற்பு:

தொடர்ந்து இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் தான். இதில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரச்சிதா. இவருக்கு ஜோடியாக நடிகர் கவின் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. தொடர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற சில விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார் ரச்சிதா.

இதற்கு நடுவில்தான் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக களமிறங்கினார் ரச்சிதா.

பிக்பாஸில் எண்ட்ரி:

இதில் இவருக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்தது. இதற்கு நடுவே விஜய் டிவியில் சீரியல்களில் பணிபுரிந்து வந்த நடிகர் தினேஷிற்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரச்சிதாவும் தினேஷும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சில காலங்கள் மட்டுமே நீடித்த அவர்களது உறவு பிறகு பிரிவினை கண்டது. இதனிடையே தொடர்ந்து திரைப்படங்களிலும் முயற்சி செய்து வருகிறார் ரச்சிதா.

பிக்பாஸ் 7 ஆவது சீசனில் தினேஷ் போட்டியாளராக களமிறங்கினார். அப்பொழுது அவர் ரச்சிதாவை சமாதானப்படுத்துவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே நிறைய முயற்சிகளை செய்தார். ஆனால் அது எதுவுமே பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்து ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் ரச்சிதா தற்சமயம் கன்னட இயக்குனர் ஒருவரைதான் திருமணம் செய்ய இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version