விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது.

ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படுகிறது.

விஜய் சேதுபதி வரார்

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அடுத்து பிக் பாஸில் எட்டாவது சீசனை துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்சமயம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்பதால் விஜய் சேதுபதிதான் இதை தொகுத்து வழங்குகிறார் என்று விஜய் டிவி அறிவித்திருக்கிறது.

 

இதற்காக விஜய் சேதுபதிக்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் இரண்டு திரைப்படங்களுக்கான மொத்த சம்பளம் இது என்ற ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

போட்டில பெண்கள் பயப்படுறாங்க

எனவே கண்டிப்பாக விஜய் சேதுபதி 100 நாளும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து சர்ச்சையான சில தகவல்களை பிக் பாஸின் முந்தைய போட்டியாளரான மாயா வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி குறித்த ப்ரோமோவை பார்த்தேன். நன்றாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நான் கூறுவதெல்லாம் என்னவென்றால் எப்பொழுதும் பார்க்கும் மக்கள் பெண்களுக்கு ஆதரவாக இருங்கள்.

உங்களுக்கு உண்மை தெரியாது

அவர்களை பயப்பட வைக்காதீர்கள். வுமன் கார்டு என்கிற ஒரு விஷயம் பிக் பாஸில் இருக்கிறது. அங்கே இருக்கும் பெண்கள் அதை பயன்படுத்துவதற்கான இடத்தை மக்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் பிக் பாஸில் பார்க்கும் எல்லா விஷயமும் உண்மை கிடையாது.

பிக் பாஸில் காட்டப்படுவது ஒரு பாதி மட்டும் தான். பாக்கி இன்னொரு பாதியை நாங்கள் சொல்ல முடியாது அது ரகசியமானது. பிக் பாஸை பொறுத்த வரை அதை ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக மட்டுமே அணுக வேண்டும் தொடர்ந்து அதை குறித்தும் அந்த அதில் பங்கேற்பவர்களை குறித்து மோசமாக பேச வேண்டாம் என்றெல்லாம் கூறி மாயா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்த பதிவு தற்சமயம் சர்ச்சையாக துவங்கியிருக்கிறது. ஏனெனில் பிக் பாஸ் 7வது சீசனில் மாயா மீது குற்றம் இருப்பதாக பொதுமக்கள் பலரும் அவரை குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் அப்படி குற்றம் சாட்டிய மக்களை குறை கூறும் விதமா தான் மாயா இப்படி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version