பிக்பாஸ் சீசன் 8.. இறுதியான போட்டியாளர்கள் பட்டியல்.. யார் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

2024 துவங்கி பாதி வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 8 குறித்த பேச்சுக்கள் தற்சமயம் துவங்கி இருக்கின்றன. பொதுவாக வருடத்தின் இறுதிக்கு முன்பு ஆரம்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி வரை நீடிக்கும் வகையில் நடத்தப்படும்.

மொத்தமாக 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே அதிகமாக ஆடியன்சை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.

தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் யாரெல்லாம் பங்கு பெறப் போகிறார்கள் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பங்கு பெறும் பிரபலங்கள்:

அந்த வகையில் இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ஷாலின் சோயாவும் அவருடைய காதலருமனை டிடிஎஃப் வாசனும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

வின்னர், கஜினி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலமாக இருக்கும் நடிகர் ரியாஸ் கான் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் தற்சமயம் வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா இதில் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் அதிக சர்ச்சைக்கு உள்ளான பாடகி சுசித்ராவின் கணவரான கார்த்திக் குமாரும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்.

மேலும் பப்லு பிரித்திவிராஜ் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. போன பிக்பாஸ் சீசனிலேயே இவர் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்பொழுது அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

வாய்ப்பிழந்த நடிகைகள்:

பாடகி ஸ்வேதா மேனன் மற்றும் பாடகி கல்பனா ஆகியோரும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். விஜய் டிவியை சேர்ந்த ரோபோ சங்கரும் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ரோபோ சங்கர் விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வருபவர் என்பதால் அவர் பிக்பாஸில் கலந்து கொள்வது அவருக்கு அதிகமான வரவேற்பை ஏற்படுத்தி தரும் என்று கூறப்படுகிறது. தற்சமயம் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சோனியா அகர்வால் அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் முன்பு பிரபலமான நடிகையாக இருந்து இப்பொழுது வாய்ப்பை இழந்த நடிகை கிரனும் சீசன் எட்டில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்டின் படி பார்க்கும் பொழுது அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சுவாரசியமானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version