கருப்பு சாமி யார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

கிராமங்களில் இன்றும் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசாமி பிறப்பு பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா? இந்த கருப்பு சாமி தான் வீரத்திற்கு பெயர் பெற்ற கடவுள் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்களால் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வால்மீகி தனது ராமாயண பக்கங்களில் இந்த கருப்பு சாமியின் பிறப்பானது தர்ப்பையில் இருந்து வந்ததாக எழுதி இருக்கிறார்.

ஆம். சீதா தேவியை பிரிந்து ராமன் இருந்த பொழுது சீதைக்கு லவன் என்ற பிள்ளை பிறந்தது. அந்த குழந்தையை முனிவர் ஆசிரமத்தில் சீதா தேவி பெற்றெடுத்தாள். நீர் பிடிப்பதற்காக சீதா சென்றிருந்த சமயத்தில் குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி முனைவரிடம் கூறி சென்று விட்டாள்.

மேலும் அந்த சமயத்தில் முனிவர் தியானத்தில் இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணத்தில் சீதாதேவி தன் குழந்தையும் எடுத்துச் சென்று விட்டார்.

கண் விழித்துப் பார்த்த முனிவர் தொட்டிலில் குழந்தை இல்லாததை பார்த்து தன்னிடம் இருந்த தர்பைப்பிள்ளை தொட்டிலில் கில்லி போட்டு அதை பிள்ளையாக மாற்றி விட்டார். இதனை அடுத்து சீதாதேவி தண்ணீர் குடத்துடன் வந்து தொட்டிலை பார்த்தபோது அதில் இன்னொரு குழந்தையை பார்த்து வியப்பு உற்றாள்.

 மேலும் முனிவர் சீதையின் கையில் குழந்தை இருப்பதை பார்த்து தான் செய்த தான் செய்வதின் மூலம் உருவான குழந்தையை பற்றி அவர் கூறினார். அந்த குழந்தை தான் குசன் என்று அழைக்கப்பட்டது. அந்த குழந்தைதான் கருப்பு சாமியாக கிராமங்களில் இன்றும் காவல் தெய்வமாக விளங்குகிறது.

தங்களது வம்சத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பு இல்லாத போது சீதைக்கு மட்டும் எப்படி இரட்டை குழந்தை பிறந்தது என்று ராமர் வினவும் போது நடந்த உண்மையை சீதாதேவி கூறுகிறார். அதனை அடுத்து சீதையின் முதல் பிள்ளையான லவன் நாடாள இரண்டாவது பிள்ளையான குசன் காட்டினை ஆள சென்று விட்டார்.

அவரே கருப்புசாமி யாவும் கருப்பண்ண சாமியாகவும் இன்று கிராமங்களில் காவல் சாமியாகவும் திகழ்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …