19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..!

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் திரை உலகில் அதிகளவு உள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரை உலகில் நடிகராக களம் இறங்கி இருக்கிறார்.

அண்மையில் இவர் பேட்டிகளில் தனது அப்பாவின் சிபாரிசை வைத்தோ அவரது புகழைக் கொண்டோ பெயர் பெற விரும்பவில்லை. தன்னுடைய சுய அடையாளத்தையும் திறமையும் கொண்டு தான் பெயர் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேசி இருந்தார்.

19 வயசுல ஓவர் ஆட்டம்..

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவியதோடு சூர்யா விஜய் சேதுபதிக்கு இருப்பது தன்னம்பிக்கையா? அல்லது தலைகனமா? என்பது போல ரசிகர்களுக்குள் சுவாரசியமான பேச்சுக்கள் எழுந்தது.

இந்நிலையில் தனது முதல் படத்தில் தனது தந்தையின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசுவது சரியான அணுகு முறை என மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் சூர்யா தனது முதல் படத்தில் தனது பெயர் வெறும் சூர்யா என்று மட்டும் தான் வரும் சூர்யா விஜய் சேதுபதி என வராது என்று சொன்னதை அடுத்து ஏகப்பட்ட ட்ரோல்கள் உருவானது.

பீனிக்ஸ் டீசர் பிடிக்கல..

அது மட்டுமல்லாமல் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் வீழான் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்க காரணமே விஜயசேதுபதி தான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

அத்தோடு 19 வயதில் ஓவர் ஆட்டம் போடுவதாக விஜய் சேதுபதி மகனை பற்றி பேசியிருக்க கூடிய பிஸ்மி தமிழ் சினிமாவில் அறிமுக நாயகனாக அறிமுகமாக உள்ள பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளி வந்தது.

இந்தப் படத்திற்கான பூஜையில் கூட தனது அப்பா விஜய் சேதுபதியை அழைக்காத சூர்யா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு அழைத்தது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..

அத்தோடு இது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டியில் விஜய் சேதுபதியின் மகன் தான் நான் என்று சொல்வதற்கு சூர்யா மறுப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் மகன் ஒரு பக்கம் பிடிவாதம் பிடித்தாலும் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க விஜய சேதுபதி தான் காரணம் என்பதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் தொடர்ந்து தனது நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் இடம் பிடித்தால் மட்டும் தான் ஹீரோவாக வர முடியும். அந்த வகையில் பீனிக்ஸ் படத்தில் டீசர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என பிஸ்மி அந்த பேட்டியில் பளிச்சென்று கூறியிருக்கிறார்.

இதற்கு காரணம் சிறுவர் சீர்திருத்த பள்ளி, பாக்சிங் அடிதடி, ஆக்சன் காட்சிகள் விஜயசேதுபதியின் மேனரிசம் தான் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. இங்கு சூர்யா நடிப்பில் எதுவுமே புதிதாக தெரியவில்லை. 

மேலும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களை பெருமளவில் கவரவில்லை. இப்படி இருக்க படம் வெளி வந்து எப்படி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பிஸ்மி பேசியிருக்கிறார்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, மகன் சூர்யா 19 வயதில் ஓவர் ஆட்டம் போடுவதாக இணையங்களில் கருத்துக்கள் வலுத்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version