“குட்டீஸ் விரும்பி சாப்பிடும் பாகற்காய் ஃப்ரை..!” – யம்மி யம்மி டேஸ்டில்..!!

ஆரோக்கியமான காய்களின் வரிசையில் பாகற்காயும் ஒன்றாக உள்ளது இந்த பாகற்காய் கசப்பு சுவையோடு இருப்பதால் குட்டீஸ் அனைவரும் அதை உண்ண மறுப்பதோடு மட்டுமல்லாமல் அந்தக் காயை உணவோடு சேர்த்து சாப்பிட அடம் பிடிப்பார்கள்.

அப்படிப்பட்ட ஆரோக்கியமான இந்த பாவக்காய் நீங்கள் டேஸ்டியாக செய்யும் போது குழந்தைகள் அதை ஆர்வத்தோடு விரும்பி சாப்பிடுவார்கள் அப்படிப்பட்ட பாகற்காய் ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாகற்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்

1.பாகற்காய் கால் கிலோ

2.உப்பு ஒரு டீஸ்பூன்

3.மஞ்சள் தூள் சிறிதளவு

4.மிளகாய் தூள்

5.மிளகுத்தூள்

6.கரம் மசாலா

7.அரிசி மாவு 2 டீஸ்பூன்

8.இஞ்சி பூண்டு விழுது

9.கடலை மாவு 2 டீஸ்பூன்

10.பொரித்து எடுக்க எண்ணெய்

செய்முறை

முதலில் கால் கிலோ பாகற்காயை வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாகற்காய் பிஞ்சாக இருக்கும் பொருட்டு அதில் இருக்கக்கூடிய விதைகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

 இனி இந்த பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மையை நீக்குவதற்காக நீங்கள் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை இதனுள் போட்டு வைத்து விடவும்.

பிறகு இதனை எடுத்து கழுவி விட்டு ஒரு பவுலில் இந்த பாவக்காய் மற்றும் அரிசி மாவு, கடலை மாவு,மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை ஒன்றாக போட்டு நன்றாக பிசைந்து விட்டு அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

இந்தக் கலவை நன்றாக ஊறிய பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெயை வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் இந்த பாகற்காய் மசாலா கலந்த கலவையை எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

 இப்போது சூடான சுவையான பாகற்காய் ஃப்ரை ரெடியாகிவிட்டது இதை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் யம்மி யம்மி என்று அத்தனையும் உண்டு விடுவார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …