பாஜக உள்ளே வந்துவிடும் என கூறிய திமுக செய்த செயல்

பல வருடங்களாக தமிழ்நாட்டில் அரசியல் என்பது திமுக அதிமுகவுக்கு இடையில் நடந்தது என்றாலும்,  திமுகவின் முக்கியமான பிரச்சார யுக்தியாக இதுவரை கையாண்டு வந்தது பாஜக உள்ளே வந்துவிடும் என்ற ஆயுதமே. 

தமிழ்நாட்டு மக்களின் பூரண எதிர்ப்பை  சம்பாதித்து இருக்கும் ஒரு கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சி தான்,  ஏனெனில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் திரு மோடி அவர்களின் தனியார் மையக் கொள்கையும்,  இந்துத்துவ அரசியல்,  பெரு நிறுவனங்களுக்கான உதவிகளும் தமிழக மக்களை பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு போக்கை உருவாக்கியுள்ளது.

இதை சரியாக கையாண்ட முந்தைய தலைவர்களான மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் போன  நாடாளுமன்ற தேர்தலில் மோடியா லேடியா  என்ற வாசகங்கள் மூலம் பிஜேபியை கடுமையாக எதிர்த்து  அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

அதேபோல கலைஞர் கருணாநிதி அவர்களும் பாஜகவின் எதிர்ப்பு மனநிலை தமிழ்நாட்டில் குறையாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான கொள்கைகளின் ஒரு கொள்கையான இந்துத்துவ எதிர்ப்பு என்ற கொள்கையை தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும்  திறம்பட கையாண்டு வந்தார்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது இதற்கு காரணம் திமுக தான் என நாம் தமிழர் போன்ற அமைப்புகள் குற்றம் சாட்சி வருகின்றனர்.

இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் திமுகவின் தொலைக்காட்சியான கலைஞர் டிவியின் மற்றொரு தொலைக்காட்சியான  சித்திரம் தொலைக்காட்சி என்ற பிளாக் ஷீப் டிவி  ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு உள்ளது.

அதில் தமிழ்நாடு பாரதிய ஜனதா இளைஞரணி செயலாளரான வினோத் பி செல்வம்  என்பவர்  பள்ளி மாணவ மாணவியர்கள்  மத்தியில்  இந்துத்துவாவும் தமிழகமும் என்ற தலைப்பில்  சொற்பொழிவு ஒன்றை ஆற்றியுள்ளார்.

இந்த சொற்பொழிவுக்கு பின் அந்த மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி

 வினோத் பி செல்வம் அவர்கள் பேசிய பின்பு உங்களுக்கு தமிழ்நாடு இந்துத்துவா பூமியா அல்லது திராவிட பூமியா என்ற கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு மாணவர்கள் இந்துத்துவ பூமி தான் என பதில் கூறுகின்றனர்.

இந்த காணொளியை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதன் மூலம் பிஜேபி உள்ளே வந்துவிடும் என்ற தொடர்ச்சியான பரப்புரை போலியானது பிஜேபியை தமிழ்நாட்டில் வளர்த்து விடுவதே திமுக தான் என்ற நாம் தமிழர் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகிறது என பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …