மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கா? – இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணி ஈசியாக ரிமூவ் பண்ணுங்க..!

 முகம் பார்ப்பதற்கு பளபளவென்று அழகாக இருந்தாலும் மூக்குக்கு மேல் இருக்கக் கூடிய பகுதியில் கரும்புள்ளிகளில் இருந்தால்  அது அவ்வளவு எடுப்பாக இருக்காது.

எனவே அந்த கரும்புள்ளிகளை நீக்குவதற்காக எண்ணற்ற முறைகளை ஃபாலோ செய்தும் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் எந்த கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய குறிப்புக்களை நீங்கள் தொடர்ந்து ஃபாலோ செய்வதன் மூலம் நிச்சயமாக உங்கள் மூக்கின் மேல் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை எளிதில் போக்க முடியும்.

மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும் டிப்ஸ்

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை பொடித்து அதோடு எலுமிச்சம் பழ சாறையும் கலந்து உங்கள் மூக்கின் மேல் அப்ளை செய்து விடுங்கள். இந்த பேஸ்ட்டானது கால் மணி நேரம் அப்படியே இருக்கட்டும். அதன்பிறகு ஸ்கிரப்பரைக் கொண்டு நீங்கள் உங்கள் மூக்கினை நன்கு அழுத்தி ஸ்கிரிப் செய்வதின் மூலம் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெண் கருவோடு தேனை நன்கு கலந்து உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து விடுங்கள். இரண்டு அல்லது மூன்று முறை அந்த கலவையை மூக்கில் அப்ளை செய்து விட்டு பிறகு தேய்த்து கழுவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸூடு தயிரை சேர்த்து ஊற வைத்துவிட்டு பிறகு அந்த பேச்சை உங்கள் மூக்கில் போட்டுவிட்டு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் போய்விடும்.

 கடலை மாவோடு ரோஸ் வாட்டரையும் சேர்த்து பேஸ்ட் போல் மாற்றி உங்கள் மூக்கில் தடவி மசாஜ் செய்ய கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

சர்க்கரையோடு எலுமிச்சை சாறு கலந்து இதனை மூக்கில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து நீங்கள் நன்கு ஸ்கிரப் செய்து விடுவதால் மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நின்றுவிடும்.

மேற்கூறிய இந்த வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் விரைவாக உங்கள் மூக்கில் இருக்கும் கருப்பு புள்ளிகளை விரைவாக நீக்க முடியும். நீங்களும் இந்த டிப்ஸை ஃபாலோ செய்து பார்த்து உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …