“சத்தியம் பண்ணி சொல்லுங்க இது ட்ரெஸ்ஸா..?..” – மோசமான கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்..!

 

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். ஃபோட்டோ ஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால், தன்னுடைய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். 

 

அவரின் வசீகர கண்களுக்கும், பளபளப்பான தோலும் பலரையும் பாடாய்படுத்தி வந்த நிலையில், தன்னுடைய அழகுக்கான ரகசியம் என்ன என்பதை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

 

தமிழ்,தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து வெப் சீரிஸிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவத்தை திகில் கலந்த உணர்வுகளோடு தெரிவித்துள்ளார்.

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்த ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற வெப் சீரிஸ், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது.முதல் முறையாக திகில் கதைக்களத்தை கொண்ட வெப் சீரிஸை ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

 

காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து கயல் ஆனந்தி, வைபவ், பிரியங்கா செல்வா, டானியல், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மாந்திரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரை படமாக்க செல்லும் காஜல் அகர்வாலின் குழுவினர் சந்திக்கும் அனுபவங்களை வைத்தே இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

ஒரு வீட்டை சுற்றி சுற்றியே நகரும், இந்த கதையில் அந்த வீட்டில் இருந்தது தற்போது வரை தன்னுடைய ஞாபகத்தில் இருப்பதாகவும் பல சமயங்களில் அது தன்னை அச்சுறுத்தி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

 

 

அந்த வீட்டை நினைத்தால் தற்போது கூட தன்னுடைய குரல் நடுங்குவதாகவும், இதே போன்ற ஒரு உணர்வு இந்த வெப் சீரிஸை பார்ப்பவர்களுக்கும் இருக்குமென ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை தொடரப்போவதாக கூறியுள்ள காஜல் அகர்வால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *