செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியா பவானி சங்கர் அதன்பிறகு ஒரு பிரபலமான சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் படம் வந்த பிறகு வெள்ளித்திரை பக்கம் அவர்களுடைய மேயாதமான் படம் மூலம் ரசிகர்களின் ஈர்ப்பு அதிகமாக இருந்தது அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் அவருடைய கைவசம் நான்கைந்து படங்கள் இருக்கின்றது அதில் குருதி ஆட்டம் உள்ளிட்ட பல படங்களும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கூடிய இந்தியன் 2 படத்திலும் இவர் நடிக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும், அந்த படத்திற்கான ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கலக்க உள்ள பிரியா பவானி சங்கர் இப்பொழுது மகாராணி போல ஜொலிக்கும் கெட்டப்பில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து வைரலாகி வருகிறார்.
நியூஸ் ரீடர் to ஹீரோயின்
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியன்2, கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்ம. மேலும் பிரியா பவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
வரிசை கட்டி நிற்கும் படங்கள்
2021ம் ஆண்டை பொறுத்தவரை ‘குருதி ஆட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘பொம்மை’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசடதபற’, ‘இந்தியன் 2’, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
புயலுக்கே பூட்டு
நடிகைகள் வாழ்வில் புயலாய் வீசம் ஒரு விஷயம் என்னவென்றால் காதல் கிசுகிசுதான். இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகி வந்தன. எஸ்.ஜே.சூரியாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பறந்தன. ஆனால், அதை மறுத்து வந்த பிரியா பவானி ஷங்கர்.
ஒரு கட்டத்தில், எல்லோரும் பாத்துகோங்க நான் எந்த நடிகைரையும் காதலிக்க வில்லை. என்னுடைய காதலர் இவர் தான் என்று தன்னுடைய நெடுநாள் நண்பர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் கூறி கிசுகிசு புயலுக்கு பூட்டு போட்டார். மேலும், கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
சாஃப்ட் கிளாமர்
இந்நிலையில், பட்டு போன்று மின்னும் பச்சை நிற உடையில் கட்டுக்கடங்காமல் திமிரும் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் வர வர சாஃப்ட் கிளமார் காட்ட ஆரம்பிச்சுட்டீங்களே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.