“ச்சீ.. போய்யா நீ ரொம்ப மோசம்…” தினம் தினம் பார்ப்பேன்..! – சில்லறையை சிதற விடும் மீனா..!

 

திருமணத்துக்குப் பிறகு ஓரிரு தெலுங்குப் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் பங்கேற்று வந்த நடிகை மீனா, முழு வீச்சில் களமிறங்குகிறார். அடுத்தடுத்து மலையாளப் படங்களில் இளம் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

 

எண்பதுகளில் வெளியான நடிகர் திலகம் சிவாஜியின் நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் மீனா. ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்தில் நடித்தார்.’சீதா ராமையா காரி மனவரலு’ என்ற தெலுங்கு படத்தில்தான் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார் மீனா. 

 

பின்னர் தமிழில் ஒரு புதிய கதை எனும் படத்தில் நாயகியாக நடித்தார். என் ராசாவின் மனசுல படம்தான் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு வளர்ந்து மிகச் சிறிய வயதிலேயே தமிழ், தெலுங்கு படங்களில் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 

 

 

தமிழில் ராஜ்கிரண், ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், பாக்யராஜ், சத்யராஜ், கமல்ஹாசன்னு எல்லாருமே வயதில் ரொம்ப மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 

 

நடிகர்கள் முரளி, கார்த்திக் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டுமே இவருடன் நடித்த இளம் நடிகர்கள்… இவருக்கு சரியான இணையான ஜோடி சேர்ந்தவர்ன்னா அது தல அஜீத். தளபதி விஜய்க்கு ரொம்ப பிடிச்ச நடிகை மீனா. 

 

இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டாலும், இயக்குநர்கள் ஒத்துவரலைன்னுதான் அப்போ பேச்சு. ரொம்ப இளம் வயதிலேயே நடிக்க வந்த மீனா, அதே போல மிக இளம் வயதிலேயே ஓரம்கட்டப்பட்டும் விட்டார். 

 

 

பிறகு கல்யாணம், குடும்பம்னு செட்டிலான அவர், இப்போது தனது பெண் நைனிகாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி இருக்கார். ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் கொடி கட்டிப் பறந்த நடிகை மீனா. எஜமான் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு உட்கார வைத்தது. 

 

பிறகு வரிசையாக ரஜினியுடன் நடித்த முத்து, வீரான்னு அத்தனையும் சூப்பர் ஹிட்.. ஜப்பானில் இவருக்கும் ரசிகர்கள் உருவான கதை இப்படித்தான். மீனா ஆடும் டான்ஸ்..அது எந்தவகை டான்ஸாக இருந்தாலும், அதில் நளினம் இருக்கும். முகபாவனையில் அசத்திருவார் மீனா. விரல்களின் அசைவு நளினம் கூட நடனத்தில் தெரியும். 

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை மீனா பேசும்போது, வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் ஒருவர், இரணியன் படத்தில் முரளியுடன் மீனா ஆடிய “சீ போய்யா நீ ரொம்ப மோசம்.. நீ தொட்டா உடம்பு கூசும்..” அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். தினம் அதை ஒரு தடவையாவது பார்த்துருவேன்னு சொன்னார் என்பதை நினைவு கூர்ந்து சில்லறையை சிதற விட்டுள்ளார் மீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam