விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் தற்போது ரசிகர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு மார்டன் உடையில் எடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரபல மாடல் ரோஷினி ஹரிப்ரியன்.
பொதுவாக மாநிறம் கொண்ட பெண்கள் தான் திரைப்படங்கள் அல்லது சினிமா துறையில் நிலைத்திருக்க முடியும் என்ற கருத்தை உடைத்துள்ளவர் நடிகை ரோஷினி. 26 வயதான நடிகை ரோஷினி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.
விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ தொடர் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகும் போது மிக அமைதியான பொறுமையான பெண்ணாக நடித்து பலரின் அனுதாபாத்தை சம்பாதித்தார்.
தற்போது அதிரடியான பெண்ணாக நடித்துவரும் வரும் இவர் பலரது இதயங்களை கவர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளுடன் விறுவிறுப்பாக ‘பாரதி கண்ணம்மா’ தொடர் தற்போது நகர்ந்து வருகிறது.
அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் களை எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவது நடிகை ரோஷினியின் வழக்கம். இந்நிலையில் ரோஷினி சமூகவலைதளத்தில் மார்டன் உடையில் தோன்றிய காணொளிகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ரசிகர்கள் உற்சாகமாக ரசித்து வருகின்றனர்.