மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு நாடு முழுதும் கவனத்தை பெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் நிதின் கட்கரி.
அதன் படி, அனைத்து வாகனங்களுக்கும் FASTAG கட்டாயம் என சட்டம் போட்டு தற்போது கிட்டதட்ட 90 சதிவிகிதத்திற்கும் அதிகமான வாகனங்களை FASTAG முறைக்குள் கொண்டு வந்து விட்டார்.
நாட்டில் தற்போது 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையைப் பின்பற்றிய சுங்கச்
சாவடிகளில் கட்டணத்தை செலுத்துகின்றனர். இப்போது வரை 7 சதவீதம் பேர்
பாஸ்டேக் எடுக்காமல் இரண்டு மடங்குக் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஆகும் வசூலை குறைத்து காட்டி கோடிகளை ஏப்பம் விட்டு வந்தவர்களுக்கு செக் வைக்கப்பட்டது.
இனிமேல் NO டோல்கேட்
இந்நிலையில், நாட்டின் சாலைகளில் இருந்து அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றும் திட்டத்தில் அரசாங்கம் முழு வீச்சில் ஈடுப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி (Union Minister of Road Transport and Highways Nitin Gadkari) மக்களவையில் தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதை எப்படி புரிந்து கொள்வது
தொலைபேசியில் டாட்டா டோகோமோ வரும் வரை செல்போனில் ஒரு வினாடி பேசினாலும், பத்தி வினாடி பேசினாலும், 59 வினாடி பேசினாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நிமிடத்திற்கு பணம் செலுத்த வேண்டும். 61 வினாடிகள் பேசினால் இரண்டு நிமிடத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டும். அப்படித்தான் செலுத்தி வந்தோம்.
டோகோமோ வந்தபிறகு PPS, அதாவது Pay Per Seconds முறையில் பணம் செலுத்தினோம். ஒரு வினாடி பேசினால் ஒரு விநாடிக்கான பணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்ற நிலை வந்தது. இதனால், நிறைய செலவு மிச்சம். அது போல தான், இனிமேல் பயன்படுத்தும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும்
GPS மூலம் வசூல் – குறையும் கட்டணம்
கட்டண வசூலுக்காக புதிய ஜி.பி.எஸ் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ஒருவர் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சுங்க சாவடி குறித்த பிரச்சினை எழுப்பினார். இது குறித்து நிதின் கட்கரி ( Nitin Gadkari) கூறுகையில், முந்தைய அரசு காலத்தில், நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன, இது சட்ட விரோதமானது. இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற முடிவு செய்துள்ளோம்.
ஒரு வருடத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அரசு அகற்றும் என்று அவர் கூறினார். சுங்கச்சாவடிகள் (Toll Plaza) அகற்றப்பட்டதும், ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சாலையின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் இருக்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாலையில் நுழைந்ததும், வெளியேறும் இடத்திலும், இரு இடங்களிலும் உங்கள் படம் கேமராவுடன் பதிவு செய்யப்படும்.
அதன் அடிப்படையில், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, பயணிகள் வாகனத்தை எங்கும் நிறுத்தத் தேவையில்லை. இப்போது புதிய வாகனங்களில் GPS அமைப்பு வருகிறது என்று நிதின் கட்கரி அறிவித்தார். பழைய வாகனங்களில் GPS அமைப்பை பொருத்த ஆகும் செலவை அரசே இலவசமாக ஏற்கும் என அவர் கூறினார்.
பாஸ்டேக் (FASTag) முறை கட்டாயமாக்கப்பட்ட பின்னர், மோசடிகள் முற்றிலும் ஒழிந்து இருப்பதாக நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இப்போது, கோவிட் நெருக்கடி காலத்தில், சுக்க சாவடி கட்டண வசூல் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றார்.
மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
GPS முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பயன் படுத்தும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இதனால் நகர்புறங்களில் மட்டுமே வாகனங்களை இயக்கம் வாகன ஓட்டிகளுக்கு பெருமளவில் பணம் மிச்சமாகும். வாகனங்களை திருடமாட்டார்கள்.
வாகனத்திற்கான பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கும் எனவும், வாகனங்களை வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் எளிதில் அடையளாம் கண்டு விடலாம். இதனால் தேசத்தின் பாதுக்காப்பு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளனர்.