நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்த திரிஷா முதல் முறையாக லீடிங் ரோலில் சூர்யாவுடன் மவுனம் பேசியதே படத்தில் நடித்தார்.
தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார் திரிஷா. ஏராளமான விருதுகளையும் குவித்திருக்கிறார் திரிஷா.
2002ம் ஆண்டு தொலைக்காட்சி, ரேடியோக்களில் “என் அன்பே..என் அன்பே..என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி” என தொடங்கும் அந்த பாடல் காதலர்களின் கீதமாக ஒலிக்க அதன் பிண்ணனியில் மெளனம் பேசியதேவில் சந்தியாவாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் த்ரிஷா.
ஆனால் நடிக்க தொடங்கிய முதல் படமோ இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா..லேசா.. அதற்குள் மெளனம் பேசியதே வெளியாக அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் த்ரிஷா. அதே ஆண்டு அவரிம் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கம் தமிழ் சினிமா த்ரிஷாவை கொண்டாட துவங்கியது.
1983ம் ஆண்டு மே4ல் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் ஸ்கூலிங் முடித்தார். தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் வர 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கையோடு 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார்.
2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தனலட்சுமியாகவே தனிமுத்திரை பதித்திருப்பார். அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வரும் அப்படிப்போடு பாடல் அவரை சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம்.
அடுத்த சில வருடங்களுக்கு அந்த பாட்டு இல்லாமல் ஸ்கூல், காலேஜ் விழாக்களே இல்லை என்றே கூறலாம். அதன் பிறகு த்ரிஷா காம்போ என்றாலே படம் நிச்சயம் சக்சஸ்தான் என்ற அளவிற்கு கோலிவுட், டோலிவுட் என கனவுக்கன்னியாக ஜொலித்தார் த்ரிஷா.
தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், தற்போது குட்டியான பாவாடையில்தன்னுடையமுழுதொடையும் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.