தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அனு இமானுவேல் தற்போது தான் சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தினை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.சில நடிகைகள் பெயர் எடுக்க வேண்டும் என்று தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதற்கு பின்பாக தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடிப்பார்கள்.
ஆனால், சில நடிகைகள் மட்டுமே தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடித்து பிரபலமாகி விட்டு தமிழ் திரையுலகிற்கு வருவர். அந்த வரிசையில் தமிழுக்கு வந்தவர் தான், அனு இமானுவேல்.
இவர் முதன் முதலாக தமிழில் நடிகர் விஷாலுடன் “துப்பறிவாளன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் ஒரு கதாநாயகிக்கு உண்டான அலட்டல் இல்லாமல் எதார்த்தமாக நடித்திருத்திப்பார். அதற்கு பின்பாக “எங்க வீட்டு பிள்ளை” என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்தார்.
இந்த படத்தில் அனு இமானுவேல் மிகவும் குடும்ப பாங்காக தான் நடித்திருப்பார். ஆனால், இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் அப்படி எல்லாம் இல்லை. அதிகபட்ச கவர்ச்சியுடன் தான் நடித்துள்ளார்.
அதே போல் சமூகவலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை தனது வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்காகவே இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு தனது கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.