தொலைக்காட்சிகளின் மூலமும் திரைப்படங்களின் மூலம் நம் அனைவருக்கும் எளிதில் பரிச்சயம் ஆனவர் அனுஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினரான அனுஹாசன் கதாநாயகியாக பல படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், மற்றும் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகையாக நம் அனைவருக்கும் பரிச்சயமான அனுஹாசன். நடிகை சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ஆளவந்தான், ரன், போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்தார். இவ்வாறு திரைப்படங்கள் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்த அனுஹாசன் தொலைக்காட்சித் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன்னை பன்முக கலைஞராக மக்கள் மத்தியில் தொடர்ந்து அறிமுகபடுத்திக் கொண்டு வருகிறார்.
இந்திரா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அனுஹாசன் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபல திரைப்பட நடிகர் நடிகைகளை விருந்தினர்களாக கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
இவ்வாறு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருந்த காபி வித் அனு சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளர் திவ்யதர்ஷினியால் தொகுத்து வழங்கப்பட்டு காபி வித் டிடி என மாற்றப்பட்டது. அந்த விஷமாக இருந்தாலும், நச்செனவும், நறுக்கெனவும் பேசக்கூடியவர் அணு ஹாசன்.
இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஒன்பது வயதில் தனக்கு நேர்ந்த சீண்டல் குறித்து பதிவு செய்துள்ளா. அவர் கூறுகையில், கடவுள் நம்பிக்கை என்பது ரொம்பவும் பர்சனலான விஷயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதத்துல மாறுபடும். என் அம்மா, அப்பா இரண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை அதிகம். அடிக்கடி கோயிலுக்குப் போயிட்டு வருவாங்க.
வீட்டுலயும் பூஜையறை இருக்கு. தினமும் பூஜை, தூப தீப ஆராதனைகளும் நடக்கும். ஆனா, நான் அதுல பெரிய அளவுல கலந்துக்க மாட்டேன்.எனக்கு ஒன்பது வயசு இருக்கும். எங்க குடும்பத்துல உள்ளவங்களோட கோயிலுக்குப் போயிருந்தேன். கூட்ட நெரிசல்ல அப்போ ஒருத்தன் என்னிடம் தவறான முறையில் சீண்டினான்.
அப்போது, எனக்கு ச்ச்சே என்று ஆகிவிட்டது. இந்த இடம் கடவுள் இருக்கிற இடம். எவ்வளவு புனிதமான இடம். இங்கே கூட இந்த மாதிரி எண்ணங்களோட வர்றாங்களே’னு அப்போதிருந்தே நான் கோயிலுக்குப் போறதில்லனு முடிவு பண்ணிட்டேன். இதுல என்ன ஆச்சர்யமான விஷயம்னா அம்மா, அப்பா ரெண்டு பேருமே `நான் கோயிலுக்கு வரலை’னு சொன்னதையும் `வந்தாலும் சாமி கும்பிட மாட்டேன்னு’ சொன்னதையும் அவங்க பெருசா எடுத்துக்கலை.
`உன்னோட நம்பிக்கையில நாங்க தலையிட மாட்டோம்’னு சொல்லிட்டாங்க. அவங்ககூட கோயிலுக்குப் போனால்கூட காரிலேயே இருந்துடுவேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா, இல்லையாங்கிற கேள்வி வந்ததே இல்ல. என்ன காரணம்னா எனக்கு என்ன பிரச்னை வந்தாலும், அதை நான்தான் தீர்க்கமுடியும்.
நான்தான் தீர்க்கணும். அதுக்காக அதைப்போய் கடவுள் கிட்ட கொடுத்தோ இல்ல, இதுக்கு அடுத்தவங்க உதவி பண்ணுவாங்கன்னோ இருக்கமாட்டேன். என்று கூறியுள்ளார்.