சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகை ராணி. அழகிய கண்கள், நல்ல உடற்கட்டு, கம்பீர குரல் வளம் என்று அத்தனை தகுதிகளும் உள்ள நடிகை இவர். 

 

இவர் சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். அப்போது சீரியல்களில் வில்லி என்றால் அவர்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது. தாங்களே ஒரு வில்லி மாடல் வைத்து நடித்தால் மட்டும் உண்டு.

 

அப்படி நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராணி. இவர் பேசி நடிக்கும் பாணியை பல நடிகைகளும் தங்களது வில்லி வேடங்களுக்கு பின்பற்றினார்கள்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அலைகள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ராணி. 

 

இந்த தொடரைத் தொடர்ந்து, குல தெய்வம், வள்ளி, முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் என்று பல தொடர்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், பக்கிரி என்ற படத்திலும் நடித்துள்ளார். 

 

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. முதலில் இவரை அலை ராணி என்று குறிப்பிட்டார்கள். அடுத்து சொந்தம் ராணி என்று குறிப்பிட்டார்கள். 

 

 

இதற்கும் அடுத்து அத்திப் பூக்கள் ராணி என்று குறிப்பிட்டு வந்தார்கள்.இப்போது வள்ளி ராணி என்று அழைக்கிறார்கள். 

 

 

இப்படி தனக்கென ஒரு வில்லி பணியை வைத்துக் கொண்டு இவர் மிரட்டுவதும்,பேசுவதும், இவரின் பாடி லாங்குவேஜும் அனைவரையும் கவர்ந்து இழுத்து, இன்னும் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சீரியலில் கவர்ச்சி உடையில் சில காட்சிகளில்நடித்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam