விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றின் மொழி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா ஜெயின் தனது அமைதியான அழகாலும் கியூட்டான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
மாடலிங்கிலும் நடிப்பிலும் ஆர்வம் உள்ள பிரியங்கா ஜெயின் தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பிரியங்கா ஜெயின் வாய் பேச இயலாத பெண்ணாக தாவணியில் உடையில் நடித்து வருகிறார்.
மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ஜெயின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த மிகவும் மாடர்னான ஒரு பெண். ஆனாலும், சீரியலில் அவர் தாவணியில் ரொம்ப அழகாக நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்னதான் கன்னடத்தில் நடித்த இருந்தாலும் தமிழில் முதன்முதலாக இந்த சீரியல் மூலம் தான் களமிறங்கினார் இவர் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார்.
காற்றின் மொழி சீரியலில் நடிப்பதற்கு முன்பு, பிரியங்கா ஜெயின் ஆல்பங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். அதற்குப் பிறகு, 2015ல் நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட சினிமாவில் ’ரங்கிதரங்காவில்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார்.
இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார். காற்றின் மொழி சீரியலில் இவருடைய அமைதியான அழகுக்காகவும் க்யூட்டான் நடிப்புக்காகவுமே பலரும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.
நடிகை மற்றும் மாடலாக வளம் வரும் பிரியங்கா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர் நீச்சலுடையில் புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கும் சலிக்காமல் காற்றின் மொழி சீரியல் நடிகை சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.