தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் அவர் நடிக்க வந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்து வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வடிவமான ‘ஏ மாய சேசவே’ படம் தான் அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம்.
தனது காதல் கணவரான நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த படம். தமிழைப் போலவே தெலுங்கிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திலும் கிளைமாக்சில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால், தமிழில் அவர் கதாநாயகியாக அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படம் ஆகஸ்ட் 2010ல்தான் வெளிவந்தது. தெலுங்கில் 11 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“நன்றி கௌதம் மேனன் சார், எனக்குள்ளும் ஏதோ இருக்கிறது எனப் பார்த்ததற்கு நன்றி. அது என்னவோ, எனக்குள் அதை நான் பார்த்ததில்லை. இதைப் படிக்கும் அனைவருக்கும் நன்றி, இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை உருவாக்கியிருக்கிறீர்கள்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் தயாரிப்பாளர் மஞ்சுளா, அப்படத்தின் நாயகனும், தன்னுடைய கணவருமான நாகசைதன்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சமந்தாவிற்கு பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வேம்பு என்ற சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் சமந்தா. சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவருக்கு தெரியாமல் முன்னாள் காதலனுடன் படுக்கையில் இருப்பது போன்ற வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன்
நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியது., இந்நிலையில், சமீபத்தில் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா
“கணவருக்கு தெரியாமல் காதலனுடன் படுக்கையில் இருப்பது தவறு இல்லை. வேம்பு
கதாபாத்திரத்தை பார்த்து ஆதங்கப்படும் அனைவருமே இறுதியில் அவளை பார்த்து பரிதாபப்படுவார்கள்” என்று கூறினார்.
இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு படத்தின் கதாபாத்திரதிற்க்கான விளக்கம் என்ற போதிலும் சமந்தாவின் இந்த பேச்சு நியாயமற்றது என விளாசி வருகிறார்கள்.