உடல் எடை குறைத்து சிக்கென மாறிய நித்யா மேனன் – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யாமேனன். அதன் பிறகு தெலுங்கில் கொடிகட்டி பறந்து பல படங்கள் நடித்தார். 

 

என்னதான் தெலுங்கிலும் பல படங்கள் நடித்தாலும் அவருக்கும் மற்ற நடிகைகளைப் போல தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதன் மூலம்தான் வெப்பம் படத்தில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார். 

 

அதன்பிறகு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் தெலுங்கிலேயே குடியேறினார். பின்பு பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். 

 

 

பின்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்தார். அதன்பிறகு இவருக்கு தமிழ் படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

 

 

என்னதான் தமிழ் படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் நித்யா மேனனுக்கும் தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். இடையில் உடல் எடை கூடி குண்டாக தோற்றமளித்த இவர் தற்போது உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே நித்யா மேனனா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam