“என்ன கன்றாவி இது…” – புடவை மேல் ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு ஹாட் போஸ்.. – காஜல் அகர்வால் புது முயற்சி..!

 

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

 

அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

 

நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். 

 

புடவையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. எனக்குப் புடவைக் கட்டிக்கொண்டு நடிக்கத்தான் பிடிக்கும் என்கிறார் காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் புடவை அணிந்து வந்து கலந்துகொண்டார். 

 

அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது எனக்குப் பிடிக்காது. 

 

இயற்கையான அழகைக் கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாகத் தோன்றலாம். “நீச்சல் உடை, ‘டீசர்ட்’, ‘ஜீன்ஸ்’ போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று ஒருசிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 

 

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று இயக்குநர்களிடம் சொல்லிவிடுவேன் என ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அம்மணி. 

 

 

அந்த வகையில், தற்போது புடவைக்கு மேல் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன கன்றாவி இது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam