லண்டனை சேர்ந்த ஈகிள்ஸ் ஐ என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவை சேர்ந்த கவர்ச்சியான ஆண்கள் மட்டும் பெண்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.இந்த வருட கவர்ச்சி பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்தி நடிகை அலியாபட் பிடித்துள்ளார்.
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், ஹினாகான், சுர்பாப் சந்தானா, ஷிவாங்கி ஜோஷி, நியா ஷர்மா உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் அனுஷ்காவுக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது.
இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அனுஷ்கா 2006-ல் ரெண்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவரது நடிப்பில் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் முக்கிய படங்களாக அமைந்தன. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து மேலும் புகழ் உச்சிக்கு சென்றார்.
தற்போது மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளிவந்த அருந்ததி என்ற திரைப்படம்தான் அனுஷ்கா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இது தொடர்ந்து அவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன.
அந்த வகையில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி ,தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
அதன் பிறகு மிக அதிக உடல் பருமனுடன் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப் படத்திற்கு ஏற்றவாறு தொப்பை போட்ட நடிகை அனுஷ்கா அதன் பிறகு அந்த வயிற்றை அவரால் குறைக்க முடியவில்லை.
இதன் காரணமாக நடிகர்களுக்கு ஜோடி போடும் உடல் அமைப்பை இழந்ததன் காரணமாக பட வாய்ப்புகள் பறிபோனது.அனுஷ்காவிற்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது.
தற்போது இளமை இறந்தாலும் இளம் நடிகை போல உடல் தோற்றத்துடன் இருக்கும் நமது அனுஷ்காவிற்கு இன்னும் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லையாம். இதனால் கோயில் குளமாக தினமும் அலைந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தனது திருமணம் தான் முக்கியம் என்ற காரணத்தால் தற்போது சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவதாக முடிவு செய்துள்ளாராம் என்ற செய்தி தெலுங்கு சினிமாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.