நைட் பார்டி.. கவர்ச்சி உடை.. மது போதையில் திரிஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா நேற்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். வசீகரத் தோற்றத்தாலும் அபாரமான நடிப்பாற்றலாலும் தமிழ் திரை உலகை அலங்கரித்தவர் நடிகை திரிஷா. 

 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது. ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வந்து தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக திகழ்கிறார் த்ரிஷா. 

 

1999-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். 

 

 

ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசமே உள்ளது. 

 

 

அறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது. ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான விஷயம். 

 

 

ஆனால் 50-வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும். த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது. 

 

 

அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார் த்ரிஷா. 

 

 

நான்கைந்து படங்களுடன் காணாமல் போகும் நாயகிகளுக்கு மத்தியில் கடந்த 19 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக அதே வசீகரத்துடன் வலம்வரும் த்ரிஷா, தன் வெற்றிப்பயணத்தின் மூலம் தமிழ் திரை நாயகிகளுக்கான இலக்கணத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்.

 

இந்நிலையில், பல்வேறு நடிகர்களுடன் இரவு நேர பார்ட்டியில் த்ரிஷா எடுத்துக்கொண்டபுகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *