காஜல் அகர்வால் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா படங்களில் நடித்து வருகிறார்.
தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.
அது வைரலானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார். காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு தமிழ்ப் படம், பாரிஸ் பாரிஸ். கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
யாமிருக்க பயமே, கவலை வேண்டாம், காட்டேரி ஆகிய படங்களை இயக்கியவர் டீகே. அவருடைய இயக்கத்தில் திகில் படமொன்றில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். டீகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, இரானைச் சேர்ந்த நொய்ரிகா என ஐந்து கதாநாயகிகள் நடிப்பில் கருங்காப்பியம் என்றொரு படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குநர் டீகே தெரிவித்துள்ளார். கருங்காப்பியம் படத்தில் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய் போன்றோரும் நடித்துள்ளார்கள். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் காஜல் அகர்வால், தற்போது தம் அடிக்கும் புகைப்படங்கள் சிலவற்றின் மூலம் வைரலாகியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அப்போ துப்பாக்கி படத்துல தம் அடிக்க மாட்டேன்-ன்னு சொன்னது எல்லாம் பொய்யா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.