தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்த நஸ்ரியாவின் புதிய புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது. நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா.
மாட் டாட் என்ற மலையாள படத்தில் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார் நஸ்ரியா. தொடர்நது தமிழில் நேரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ராஜா ராணி, நய்யாணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவுக்கும் அறிமுகமாகிறார் நஸ்ரியா.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள நஸ்ரியா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.