ஒரு நடிகை திருமண வயதை மீறி சினிமா உலகில் பிரபலமாக வலம் வந்தாலே போதும் அந்த நடிகையை பற்றி பல்வேறு திருமண வதந்திகள் வருவது வழக்கம்தான். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி வெளிவந்த தகவல் ஆனது உண்மை என கோலிவுட் வாசிகள் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமான இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் தான் அனிருத் இவரும் கீர்த்தி சுரேஷும் காதல் செய்வதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.
உடனே இந்த தகவலை கேட்ட கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் எனக்கும் அனிருத்திற்கும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் மிக பிரபலமான தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் மிக நெருக்கமாக பழகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி நட்சத்திர ஓட்டலில் மீட்டிங் போடுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ஆரம்பத்தில் இருந்த பட வாய்ப்புகள் தற்போது இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் ஒரு நடிகை அமைதியாக இருந்தால் அது சந்தேகத்தை தான் ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி தற்சமயம் வெளிவந்த இந்த செய்தியானது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனெனில் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்மறையான கருத்தும் விஷயமும் இந்த உறவு பற்றி வெளிவரவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ராமேஸ்வரத்திற்கு ஒரு ஜாலி ட்ரிப் அடித்துள்ளார் அம்மணி. அங்கே சூரியன் அஸ்தமனம் ஆகும் காட்சியை கண்டு ரசித்ததாக கூறி அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.