நடிகை அஞ்சலி தன்னுடைய கவர்ச்சி இமேஜை நீக்கி, குடும்ப நடிகையாக மாற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. நடிகை அஞ்சலியை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம்.
அதையடுத்து ‘அங்காடித் தெரு’ படம் மூலம் பிரபலமான அவரை, ‘கலகலப்பு‘ படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை தொற்றிக்கொண்டது.
அதோடு, ‘சிங்கம்-2‘ படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் குத்துபாட்டு நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், தற்போது அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர்.
குறிப்பாக, ‘இறைவி’ படத்தில் எனது மதிப்பு, மரியாதையை அதிகப்படுத்தும் வேடத்தை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபகாலமாக கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் என்னை குடும்ப குத்து விளக்காக மாற்றி விட்டார் அவர்.
அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது விழுந்துள்ள கவர்ச்சி இமேஜ் மறைந்து, குடும்ப நடிகை என்கிற இமேஜ் அழுத்தமாக பதிந்து விடும் என்று கூறும் அஞ்சலி, இனிமேல் இந்த இமேஜை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான கதைகளுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறாராம்.
ஆனால், சமக வலைதளங்களில் கவர்ச்சி க்கு பஞ்சம் வைக்காமல் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடற்கரையில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சூடான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.