மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார். அவர்தான் நடிகை பாப்ரி கோஷ். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை, விளம்பரங்கள் என நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
கடந்த 2009ஆம் ஆண்டு கால் பில்லா என்னும் மொழி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டூரிங் டாக்கீஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இளையதளபதி விஜய் அவர்களுடன் பைரவா, சர்க்கார் திரைப்படங்களிலும் தல அஜித் அவர்களுடன் விசுவாசம் திரைப்படத்திலும், நடிகர் சந்தானம் அவர்களுடன் சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.
ஆனால் இவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் எல்லாமே இவரை பேசும் அளவிற்கு முக்கிய கதாபாத்திரம் அமைய வில்லை. இதன் காரணமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் நடிகை பாப்ரி கோஸ். தற்பொழுது சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.
இவருக்கு தற்போது 26 வயது தான் ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் க்யூட்டாக இருப்பார். அந்த வகையில் சின்னத்திரையில் நாயகி என்னும் தொடரில் கண்மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கொள்ளை அடித்த நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பாண்டவர் இல்லம் என்ற தொடரிலும் கயல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் நேரத்தில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வகையில் அதற்காக தற்பொழுது கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார் நமது நடிகை பாப்ரி கோஸ்.
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகையா இப்படி என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் தன்னுடைய தொடை, மற்றும் முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார்.