த்ரிஷா நடித்துள்ள படம் பரமபத விளையாட்டு. அவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தை வெளியிடும் ஓடிடி நிறுவனம், த்ரிஷாவை வைத்து படத்திற்கு புரமோசன் செய்யுமாறு கேட்டுள்ளது.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான திருஞானம், திரிஷாவை அணுகியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது.
இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடுத்துள்ளார் திருஞகானம். புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதை தொடர்ந்து த்ரிஷா தற்போது படத்தின் புரமோசன் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறாராம்.
சமீபத்தில் திரிஷா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து விடுபட வெளிநாட்டுக்கு ஓடிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் இவரது முன்னாள் காதலன் பாகுபலி ராணா-வின் திருமணம் நடைபெற்ற போது அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்க நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்லி வந்த த்ரிஷா வாயே திறக்காமல் இருந்தார்.
நண்பர் மட்டும் தான் என்றால் அவரது திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வேண்டியது தானே என்று பலரும் கூறினார்கள். அப்போது, முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக “அந்த” உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath)” என்று ஒரு பதிவை வெளியிட்டு “இது எனக்கு தெரியும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ராணாவுடன் மது போதையில் நெருக்கமாக இருக்கும் த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.