கவர்ச்சி உடையில் கடற்கரையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..! – வைரல் கிளிக்ஸ்..!

 

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் நடிகையாக இருக்கிறார் ஜான்வி. 

 

அவர் வெளியில் வந்தாலும், சைக்கிளிங் சென்றாலும், வாக்கிங் சென்றாலும் அவரைத் தொடர்ந்து படமெடுத்துத் தள்ளுகிறார்கள் ‘பப்பராசி’ புகைப்படக் கலைஞர்கள். 

 

ஜான்வியும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பற்றிய பதிவுகளையும், புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். 

 

இன்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. கடற்கரையில் தனது ஆண் தோழருடன் நீச்சல் உடையில் அவர் குளியல் போட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

 

 

அந்த ஆண் தோழர் யார் என்பது பற்றி அவரது பதிவில் எந்த ஒரு தகவலும் இல்லை. “ஒவ்வொரு மங்கலான சூரிய அஸ்தமனம் என்பது பாதி அழகானது தான், ஆனால் அது விரைவானது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். 

 

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

 

 

பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

 

பொது இடங்களில் அவ்வப்போது கவர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் தாறுமாறாக வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam