தமிழ் மொழி மட்டும் அல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.
இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறான விளம்பர படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிகாட்டி வருகிறார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாடலிங் துறையில் மிகவும் சிறந்து விளங்கியவர்.
இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களான ஜீவா மற்றும் விஷ்ணு விஷால் போன்ற பிரபல மிக்க நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும் தற்போதைய வரைக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் தலைகாட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை.
இவர் இறுதியாக ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. அந்த வகையில் தற்போது தமிழ் நடிகைகளுக்கு ஒரு ஆசை வந்துள்ளது.
அதாவது உடலை பாலிவுட் நடிகைகள் போல மிகவும் ஒல்லியாக மாற்றி தோற்றமளித்து புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அவ்வாறு தற்போது மாறிய தமிழ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஹன்சிகா, ராய் லட்சுமி போன்ற பல நடிகைகள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை அழகை அடியில் இருந்து நுனி வரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.