தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். நாடக நடிகையான இவர் இப்போது பிசியான திரைப்பட நடிகை. வழக்கு எண் படத்தில் திமிர் பிடித்த பணக்கார பெண்ணாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.
அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘என் சினிமா வாழ்க்கையில் வழக்கு எண் படத்திற்கு பிறகு முக்கியமான படம் இது.
காரணம் இந்த வகையே நமது நாட்டுக்கு புதியது. இனி இதுபோன்ற விண்வெளி படங்கள் நிறைய வரும். அதற்கான தொடக்கப்புள்ளி இது. இந்த கதாபாத்திரத்துக்காக 6 கிலோ எடை குறைத்தேன். நான் அதிகமாக வில்லி கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறேன்.
அந்த கதாபாத்திரங்களை விரும்பி தான் தேர்ந்தெடுக்கிறேன். நல்லவராகவே நடிப்பது போர் அடிக்கிறது. திருமணத்துக்கு பின் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று வரைமுறை சொல்வது எனக்கு பிடிக்காது.
கணவர் அனுமதித்தால் என்ற வார்த்தையை கேட்டாலே கோபம் வரும். அவர் ஏன் நம்மை அனுமதிக்க வேண்டும்? திருமணம் வேறு. நடிப்பு வேறு. எனக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.
எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை திரைத்துறையிலும்
சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள்.
எனக்கு தெரிந்து திரைப்படத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.
வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு
வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை. தெரிந்தே
தவறு செய்து விட்டு திரைத்துறை சரியில்லை என்று ஆடையை களைந்து போராட்டம்
நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்கிறார் ரித்திகா ஸ்ரீநிவாஸ்.
இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி இளமையுடன் இருக்கிறீர்களே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.