தற்போது உள்ள நிலையில் சீரியல் நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் “பாண்டியன் ஸ்டோர்” என்னும் சீரியலில் சிறப்பாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா.
மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகை சுஜிதா. தொலைக்காட்சி தொடர்களில் சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் ‘தனம்’ பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்தவர் தான் நடிகை சுஜிதா.
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை சுஜிதா.
இந்நிலையில் தற்போது, இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. மகளீர் தினமான இன்று, பெண்கள் தின ஸ்பெஷல் என்றுகூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வாவ்.. அல்டிமேட்.. அடிபொலி… என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.